புகார் மனு மீதான நடவடிக்கை குறித்து ஆர்டிஐயில் தகவல் கேட்கும் சில வழிமுறைகள் உள்ளது.
1.அரசு அலுவலகங்களுக்கு ஒரு புகார் மனு, கோரிக்கை மனு கிடைக்கப் பெற்றவுடன்,
தன்பதிவேட்டில் பதிவு செய்து ஒரு கோப்பு எண் வழங்கப்படும்.
( நான் அனுப்பிய புகார் மனு அல்லது கோரிக்கை மனுவுக்கு வழங்கப்பட்ட
தன்பதிவேட்டு எண்,கோப்பு எண் வழங்க வேண்டுகிறேன்.)
2.கோப்பு எண் வழங்கப்பட்ட அந்த புகார் அல்லது கோரிக்கை மனு, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேசைக்கு அனுப்பப்படும்.
(கோப்பு எண் வழங்கப்பட்ட எனது புகார் அல்லது கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட தேதி,அரசு அலுவலரின் பெயர், பதவி விவரங்களை வழங்க வேண்டுகிறேன்.)
3.புகார் அல்லது கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அரசு அலுவலர்,அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்புகள் எழுதி, அவருக்கு கீழ் நிலையிலுள்ள அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
( எனது மனுவைப் பெற்றுக் கொண்ட அரசு அலுவலர்,எனது மனுமீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,கள ஆய்வு,விசாரணைகள் குறித்து குறிப்புகள் எழுதி,எந்தப் பதவி நிலை, பெயர் கொண்ட அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தார் என்ற தகவலையும்,அதற்கு அவர் எடுத்துக் கொண்ட கால அவகாசத்தையும்,அவர் எழுதிய குறிப்புகளின் நகலையும் வழங்க வேண்டுகிறேன்.)
4.இப்போது கள ஆய்வு, விசாரணை செய்யும் அலுவலருக்கு நமது மனு அனுப்பட்டிருக்கும்
( எனது மனு மீது நடவடிக்கை எடுக்க குறிப்புகள் எழுதி எந்த தேதியில், என்ன பதவிநிலை அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டதோ, அந்த அலுவலர் எனது மனுமீது கள ஆய்வு மற்றும் விசாரணை செய்ய எடுத்துக் கொண்ட கால அவகாசத்தை தகவலாகவும்,கள ஆய்வு மற்றும் விசாரணை அறிக்கையின் நகலையும் வழங்க வேண்டுகிறேன்.)
5.கள ஆய்வு, விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன்,அதனை பரிசீலித்து, எந்த அலுவலகத்துக்கு அனுப்பினோமோ, அந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரியோ, அவருக்கு அடுத்த நிலை அலுவலரோ, தகுந்த உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.அத்துடன் அந்த கோப்பு முடிவுக்கு வரும்.
( இதற்கான தகவல் கோரும் வடிவத்தை தோழர்கள் யாராவது எழுதுங்கள்)
இது ஒரு மாதிரி தான்.இதை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு தகவல் கோரினால்,
அரசலுவலகங்களில் தகவல்களை வழங்க மறுக்க இயலாது.
Comments
Post a Comment