அனுப்புநர் : -
மேட்டுச்சேரி ( கி ) , காங்கியனூர் ( அ )
திருக்கோவிலூர் (வ ) , கள்ளக்குறிச்சி ( மா ).
கைப்பேசி எண் :
பெறுநர் : -
மதிப்பிற்குரிய எம் எல் ஏ அவர்கள்
சாத்தனூர் ( கி ) , ஒகையூர் ( அ ) , கள்ளக்குறிச்சி (வ)
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
பொருள் : -
“ என் வாக்கு விற்பனை அல்ல அடிப்படை வசதிகள் செய்து தர கோரும் உரிமை மனு”
ஐயா : -
1. வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறேன்.நான் ஒரு சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் ரிஷிவந்தியம் ஒன்றிய இணைச் செயலாளராக இருந்து வருகிறேன்.எங்கள் காங்கியனூர் ஊராட்சியில் பல்வேறு ஊழல் நடைப் பெற்று உள்ளது அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தேன் ஆனால் எந்த பயனும் இல்லை.
2. வாக்கு செலுத்துவது ஜனநாயகத்தின் கடைமை அதை சரியாக செய்து விட்டேன் நான் ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எதிராக போராடி வருகிறேன். எனவே நான் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்கு செலுத்தினால் ஒரு விதத்தில் அதுவும் லஞ்சம் தான் என் மனம் ஏற்க மறுத்து விட்டது.அதனால் பணத்தை திருப்பி உங்கள் முகவரிக்கு மணியார்டர் செய்து விட்டேன் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.உங்கள் செயல்பாடு என்னை கவர்ந்துள்ளது எனவே எனது தனிப்பட்ட வெறுப்பு அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். வாக்கு செலுத்த பணம் பெற்றுக் கொண்டால் என் உரிமைகளை இழந்து விடுவேன். வாக்கு செலுத்துவது ஜனநாயகத்தின் கடையை அதை செலுத்தி விட்டேன்.எங்கள் கிராமத்திற்கு தேவையை பூர்த்தி செய்ய கோருவது எங்கள் உரிமை.கடைமை உரிமையை தாங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.எங்கள் கிராமத்தில் சில வசதிகள் உள்ளது அதை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்
3. காங்கியனூர் ஊராட்சியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி நடுநிலைப் பள்ளியாக இருந்து வருகிறது.அவற்றை தகுதி உயர்த்தி உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பட வேண்டும்.
4. மருத்துவ வசதிகள் இல்லை இரவில் யாருக்காவது பாம்பு கடித்து விட்டாலோ அல்லது பெண்கள் குழந்தை பெற பிரசவ வலி வந்தாலோ , பொது மக்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ , விஷம் அருந்தி விட்டாலோ முதலுதவி பெற முடியாமல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை அல்லது திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை , பாண்டிச்சேரி மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டிய உள்ளது. அதற்குள் மக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவே காங்கியனூர் ஊராட்சியில் ஆரம்ப அரசு பொது மருத்துவமனை கட்டி தர வேண்டும்.
5. மேட்டுச்சேரியில் நீண்ட நாட்களாக பகுதி நேர நியாய விலைக் கடையாக இருந்து வருகிறது அவற்றை முழு நேர நியாய விலை கடையாக மாற்றி நியாய விலை கடை கட்டிடங்கள் கட்டியும் தர வேண்டும்.
6. மேட்டுச்சேரி கிராமத்தில் சுமார் 400 மேற்கு பட்ட வீடுகள் உள்ளது மக்கள் தொகை 3000 மேல் இருக்கக்கூடும் குடி நீர் உயர் தேக்கு 30,000 லிட்டர் அளவை மட்டுமே கொண்டுள்ளது அதனால் நான்கு தெருக்களுக்கு தண்ணீர் பஞ்சம் பத்து ஆண்டுகள் மேல் நீடித்து வருகிறது.தண்ணீர் பஞ்சத்தை போக்க கூடுதலாக குடிநீர் உயர் நிலை தேக்கு தொட்டி புதியதாக கட்டித் தர வேண்டும்.
7. மேட்டுச்சேரி ஆரம்ப பள்ளி கூடம் கட்டிடங்கள் பாழடைந்து அபாய நிலையில் உள்ளது.அவற்றை இடித்து விட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
8. வாக்கு விற்றால் என் உரிமைகளை இழந்து விடுவேன் அதன் அடிப்படையில் நானும் எனது நண்பர் பிரகாஷ் பத்து ரூபாய் இயக்கத்தின் ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் மற்றும் நவ் இந்தியர் டைம்ஸ் நிருபர் ஆகிய நாங்கள் உரிமைக்காக எடுத்த முடிவு.
இடம் : - .
நாள் : - --------------------------------------. உண்மையுள்ள
Comments
Post a Comment