தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் பிரிவு 10 ஆனது பட்டா பதிவு புத்தகத்தில் உள்ள விவரங்களில் எப்படி மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் பிரிவு 10 ஆனது பட்டா பதிவு புத்தகத்தில் உள்ள விவரங்களில் எப்படி மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. 

மேலும் இந்தப் பிரிவு தாசில்தாரருக்கு தான் பட்டாவில் மாற்றம் செய்ய அதிகாரம் உள்ளது என்றும் கூறுகிறது.

மதுரை உயர்நீதிமன்றம் " T. R. தினகரன் Vs வருவாய் கோட்டாட்சியர் (2012-3-CTC-823)" என்ற வழக்கில், தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டப்படியும், அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட விதிகளின்படியும், பட்டா பதிவு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் மாறுதல் செய்வதற்கு தாசில்தாரருக்கு தான் பிரிவு 10 ன்படி அதிகாரம் உள்ளது என்றும் அவ்வாறு மாறுதல் கீழ்கண்ட சூழ்நிலைகளில் மட்டும் தான் செய்ய முடியும்

" எந்தவொரு நபரும் இறந்து விட்டால் அல்லது அந்த நிலத்தின் உரிமை மாறுதல் செய்யப்பட்டிருந்தால் அல்லது அந்த சூழ்நிலைகளில் பிற்பாடு ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டிருந்தால் போன்ற காரணங்களின் அடிப்படையில் மட்டுமே மாறுதல் செய்ய முடியும்"

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று சூழ்நிலைகளில் மட்டுமே பட்டாவில் மாற்றம் செய்ய தாசில்தாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாறுதல்களை செய்ய விரும்பும் நபர் ஒரு மனுவை முதலாவதாக தாசில்தாரருக்கு தான் கொடுக்க வேண்டும். 

தாசில்தார் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு உரிய வாய்ப்புகள் அளித்து அதன்பிறகே தனது உத்தரவை பிறப்பிக்க வேண்டும். பட்டா மாற்றம் அவசியம் என்றால் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " அம்சவேணி Vs மாவட்ட வருவாய் அலுவலர் ( W. P. NO - 16294/2012, Dt - 4.4.2014)" என்ற வழக்கில், அரசாங்கத்தால் ஒருவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டு அதற்காக ஒரு பட்டா வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த பட்டாவை ஒரு உரிமை ஆவணமாக கருத முடியும். அப்படிப்பட்ட பட்டா என்பது அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை குறித்த ஆவணமாக ஏற்றுக் கொள்ளலாம். 

ஆனால் அவ்வாறு இல்லாத நிலையில் சொத்தின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிவதற்கு பட்டாவை பயன்படுத்த முடியாது. 

ஆவணங்களின் அடிப்படையிலும், சுவாதீனத்தின் அடிப்படையிலும் ஒரு சொத்தின் உரிமையாளர் யார் என்பது குறித்து ஒரு பிரச்சனை இருந்தால் அதனை தீர்மானிக்க தாசில்தாரருக்கு அதிகாரம் இல்லை, அந்த அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே ஒரு சொத்து குறித்து உரிமை சம்மந்தப்பட்ட பிரச்சனை இருக்கும் போது தாசில்தாரருக்கு பட்டா மாற்றம் செய்ய உரிமை இல்லை என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. No - 491/2012
Dt - 4.6.2014

விஜய் சக்கரவர்த்திக்காக அவருடைய அதிகாரம் பெற்ற முகவர் R. M. சாத்தையா Vs மாவட்ட ஆட்சியர், சிவகங்கை மற்றும் இருவர்

2015-3-TLNJ-CIVIL-134

நன்றி...!

Comments