ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பதவியில் தற்சமயம் பணியாற்றி வரும் தொடர்பாக:
ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழ் மனு:
அனுப்புதல்:
பெறுதல் :
பொது தகவல் அலுவலர் அவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாத்தையங்கார்பேட்டை.
ஐயா :
தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பதவியில் தற்சமயம் பணியாற்றி வரும் தொடர்பாக:
1. மேற்படி நபர் உள்ளாட்சி துறையில் முதன்முதலில் பணியில் சேர்ந்த நாள் பதவி பணியிடம் ஆகிய தகவல்கள் தேவை
2. மேற்படி நபர் அதன்பின்னிட்டு தற்சமயம் உள்ள பணியிடம் வரை இடைப்பட்ட காலத்தில் பணியாற்றிய பதவிகள் பணியிடங்கள் காலம் ஆகிய தகவல்கள் தேவை.
3. மேற்படி நபர் அரசு பணியில் சேர்ந்த போது துறையிடம் காட்டியுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரம் தகவலாக தேவை
4. மேற்படி நபர் இதுவரை துறை அனுமதி பெற்று அடைந்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரம் தகவலாக தேவை.
5. மேற்படி நபர் கடைசியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போது பணியாற்றிய அலுவலகம் பதவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாள் மீண்டும் பணியில் சேர்ந்த நாள் ஆகிய தகவல்களும் அந்த பணியிடை நீக்க உத்திரவு நகலும் விபரம் தகவலாக தேவை.
6. மேற்படி நபர் மீது இது வரை துறை ரீதியாக எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் தகவலாக தேவை.
7. மேற்படி நபர் மீது இது வரை துறை ரீதியாக எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் பதிவாகியுள்ள இவரது பணிப்பதிவேட்டின் முழு நகல்களும் தகவலாக தேவை.
8. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.
இது சம்பந்தமாக உரிய கட்டணம் செலுத்த வில்லை, எனவே "வறுமைக்கோட்டின் கீழ் இலவசமாக" வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
இடம்: தீர்த்தார அள்ளி
நாள்: 10/11/2021
தொடர்பு முகவரி :
.
Comments
Post a Comment