2005ன் புதிய
இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம்.
*இந்த 2005 சட்டப்படி, இந்து பூர்வீகச் சொத்துக்களில், மகன்களைப் போலவே, மகள்களுக்கும் சம பங்கு கொடுக்க வேண்டும் என்று புதிய சட்டம் கொண்டு* *வரப்பட்டுள்ளது. இந்த சட்டமானது, 9.9.2005 முதல் அமலில் வருகிறது. இந்த திருத்த சட்டத்தில், இந்து* *வாரிசுரிமைச் சட்டம் 1956ன் பிரிவு 6ஐ (அதுதான் பூர்வீகச் சொத்துக்களுக்கு யார் யார் வாரிசு என்று* -*சொல்வது) *முழுவதுமாக* *மாற்றி எழுதப்பட்டுள்ளது.*
*2005ன் புதிய பிரிவு 6ன்படி, பூர்வீகச் சொத்தில்,* *மகன்களைப் போலவே, மகள்களுக்கும் சரி சம உரிமை உண்டு என்று சொல்லி இருக்கிறது.*
*அப்படியென்றால், ஏற்கனவே சொத்தை பாகம் பிரித்துக் கொண்ட மகன்கள், அந்த சொத்தை மகள்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அதற்கு விளக்கமாக, அந்த சட்டம் 2005ல் வருவதற்கு முன்னர், இதை ஆரம்பித்த காலமான, 20.12.2004 தேதியை கெடு தேதியாக வைத்துக் கொண்டார்கள். அதன்படி, 20.12.2004க்கு முன்னர் பிரித்துக் கொண்ட (அதாவது மகன்களுக்குள்* *மட்டும் பிரித்துக் கொண்ட) சொத்துக்களின் பாகப்பிரிவினைகளை இது தொந்தரவு செய்யாது. அதற்கு பின்னர் பாகம் பிரித்திருந்தாலும், அந்த சொத்தில் மகள்களுக்கும் பாகம் கொடுக்க வேண்டும். அது இல்லாமல், ஏற்கனவே பாகம் கேட்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறதே, அதை என்ன செய்வது என்ற கேள்வியும் கூடவே வருகிறது. அதற்கும் முடிவாக, பாக வழக்குகள் போட்டிருந்தாலும், அதில் பைனல் டிகிரி கொடுத்திருந்தால் இந்த புது சட்டம் தலையிடாது. மற்றபடி அந்த வழக்கு எந்த கோர்ட்டில் இருந்தாலும், அதிலும் மகள்களுக்கு சரிசம பங்கு உண்டு என்றும், அவ்வாறு அந்த வழக்கில் கேட்காமல் இருந்தாலும், இப்போது இந்த புது சட்டப்படி பங்கு கேட்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.*
Comments
Post a Comment