#தனது வீட்டு குப்பைத் தொட்டியில் ஆகாரம் தேடிக் கொண்டிருந்த ஏழையைப் பார்த்த செல்வந்தன் இவ்வாறு கூறினான்,
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் ஏழை இல்லை" என....
தன் எதிரே நிர்வாணமாய்த் திரிந்த ஒரு பைத்தியக்காரனைப் பார்த்து அந்த ஏழை கூறினான்,
"ஓ இறைவா உனக்கு நன்றி, நான் பைத்தியக்காரன் இல்லை" என....
தன் எதிரே வரும் ஆம்புலன்ஸைப் பார்த்த பைத்தியக்காரன் நினைத்தான்,
"ஓ இறைவா உனக்கு நன்றி, நான் நோயாளி இல்லை" என....
நோயாளி தன் எதிரே வந்த பிணவறை ஊர்தியைப் பார்த்து பதறினான்,
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் சாகவில்லை" என....
இறந்தவர்கள் மட்டுமே இறைவனுக்கு நன்றி சொல்ல மாட்டார்கள்
இந்த அற்புதமான வாழ்க்கை எனும் பரிசைக் கொடுத்த இறைவனுக்கு நாம் ஏன் நன்றி செலுத்தக்கூடாது....
வாழ்க்கை என்பது என்ன?
தெரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் மூன்று இடங்களுக்குப் போகவேண்டும்..
(1.) மருத்துவமனை
(2) ஜெயில்
(3)சுடுகாடு.
1 - ஆரோக்கியத்தைவிட மற்ற எதுவுமே பெரியதில்லை என்பதை "மருத்துவமனை" புரியவைக்கும்.
2 - சுதந்திரத்தைவிட விலை மதிப்பானது வேறு எதுவும் இல்லை என்பதை "ஜெயில்" புரியவைக்கும்.
3 - உயிரோடு வாழ்வதைவிடப் பெரியது எதுவுமே இல்லை என்பதை "சுடுகாடு" புரியவைக்கும்.
எந்த பூமி இன்று நமது காலுக்குக் கீழேயோ அதே பூமி நமக்கு மேற்கூரையாகும் நாள் வரும்.
உயிர்ப்பான உண்மை....
வரும்போதும் நாம் எதையும் கொண்டு வரவில்லை.
போகும்போதும் எதையும் கொண்டு போகப்போவதும் இல்லை...
எனவே இரக்கமும் அன்பும் உள்ளவராகி இறைவன் கொடுத்தவைகளுக்காக எப்போதும் அவருக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருப்போம்....
நன்றி இறைவா.... வாழ்க வளமுடன்🙏🙏🙏
------------+++++++--------+++++++
Comments
Post a Comment