தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டம்...!
2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது.
எங்கே பதிவு செய்ய வேண்டும்...?
கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய் யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப்பதிவின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவண ங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்ட், வருமா னவரித் துறையால் வழங்கப்பட்ட பான் கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக் கான ஆதாரம், திரு மண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப் படுத்தும் விதமாக வேறு ஏதா வது ஆதாரம் போன்வற்றை அளிக் க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்...?
சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வ தற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அத னுடன் தே வையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத் துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண் ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல்போ னால், அடுத்த 60 நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கி றது. இப் போது கட்டணம் 150 ரூபாய்.
அப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்...?
திருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும் , என் அனுபவம் மற்றும் பொது அறிவின் அடிப்படையி ல் சொல்ல வேண்டு மானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாம ல், அதன் பிறகு விண்ணப் பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போ து, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறை யீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாள ரிடம் முறையீடு செய்யலாம்.
இத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப் போது என்ன அவசியம்...?
பிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந் தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமண ங்களைப் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.
இந்தச் சட்டத்தால் என்ன பலன்...?
ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அது பற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்ப தற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒரு வர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில் கூட அந்த ஆசாமி நாலு திருமணங்க ளையுமே பதிவு செய்திருந்தா லும் கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்தக் கேசில் முக்கியமான சில முடி வுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும்.
இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா...?
ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இச்சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசிய ம். இன்னும் சொல்லப்போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திரும ணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின்கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட இச்சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படு வது அவசியம்.
அதுமட்டுமல்ல, ஒருவருடைய திரு மணப்பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.
பதிவு செய்யும் முறை :-
திருமணம் முடிந்த தம்பதிகள் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள பக்கத்தில் உள்ள திருமணப்பதிவு என்ற பகுதிக்குச் சென்று, அதில் உள்ள விண்ணப்பத்தை இணையத்திலேயே பூர்த்தி செய்யவேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யும்போது கேட்கப்படும் ஆவணங்களை ஸ்கேன் செய்து மணமக்களின் புகைப்படங்களுடன் சேர்த்து இணைக்கவேண்டும்.
விண்ணப்பித்து முடித்தவுடன் உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தின் இணையதள பக்கத்திற்கு உங்கள் விண்ணப்பம் அனுப்பிவைக்கப்படும். அதன்பின், சிலமணி நேரங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அதில் உங்கள் திருமணத்தை பதிவுசெய்துகொள்ள, நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிடப்பட்ட தேதியில் உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, ஒரிஜினல் ஆவணங்களுடன் உங்களின் இணையர் மற்றும் சாட்சி கையொப்பமிட மூன்று நபர்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லவேண்டும்.
திருமணப் பதிவுதிருமணப் பதிவு
இணைக்க வேண்டியவைகள் என்னென்ன...?
ஆன்லைன் விண்ணப்பம் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் ( திருமண அழைப்பிதழ், கோவில், பள்ளிவாசல், சர்ச் என எங்கு திருமணம் நடந்ததோ அதற்கான ரசீது ) முகவரிச் சான்றுக்காக வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை... இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் வயதுச் சான்றுக்காக பிறப்புச் சான்றிதழ் ,கல்விச் சான்றிதழ் ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் சாட்சி கையொப்பம் இடும் மூன்று நபர்களின் அடையாள அட்டை மணமக்களின் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்.
திருமணத்தைக் காலதாமதமாக பதிவு செய்வதற்கான வழிமுறைகள் :
'தமிழ்நாடு திருமணம் பதிவுச் சட்டம் 2009'-ன்படி உங்கள் திருமணத்தை 150 நாள்களுக்குப் பின் தமிழ்நாடு திருமண பதிவின்கீழ் பதிவுசெய்ய இயலாது. அதற்கு மாற்றாக, எந்த மதத்தின்படி உங்களுக்குத் திருமணம் நடந்ததோ அந்த மதச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யலாம். உதாரணத்துக்கு, இந்துக்கள் எனில் இந்து திருமண சட்டத்தின் கீழும், கிறிஸ்தவர்கள் எனில் கிறிஸ்துவ திருமணசட்டத்தின் கீழும், இஸ்லாமியர்கள் எனில் இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து திருமணத்தை முறைப்படுத்திக்கொள்ள முடியும்.
திருமண சான்று தொலைந்தால் என்ன செய்வது...?
2016-ம் ஆண்டுக்குப் பின் பதிவு செய்தவர்களின் திருமண சான்றுகள் அனைத்துமே இணையத்தில் தகவல்களாக உள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதி சார்பதிவாளரிடம் கையொப்பம் பெற்று, அசல் சான்றிதழாக மாற்றிக்கொள்ளலாம். 2016-ம் ஆண்டுக்குமுன் திருமணத்தைப் பதிவு செய்தவர்கள் எனில், இதற்குமுன் உங்கள் திருமணத்தை எங்கு பதிவு செய்தீர்களோ அதே அலுவலகத்தில் சார்பதிவாளரிடம் மனுகொடுத்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மனு கொடுக்கலாம்.
கட்டணம் எவ்வளவு...?
90 நாள்களுக்குள் பதிவு செய்தால் 100 ரூபாய் கட்டணமாகச் செலுத்தவேண்டும். 91 முதல் 150 நாள்களுக்குள் பதிவு செய்தால் அபராதக் கட்டணம் 50 ரூபாயுடன் 150 ரூபாய் செலுத்தவேண்டும். திருமணத்தைப் பதிவு செய்து தருவதாக உங்களை அணுகும் இடைத்தரகர்களை நம்பாதீர்கள். ஆயிரக்கணக்கான ரூபாய்களை பறித்துவிடுவார்கள்.
தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் மேலும் அதிக தகவல்களுக்கு
https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள பக்கத்தையோ, 044-24640160 என்ற தொடர்பு எண்ணையோ அணுகலாம். அல்லது உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விவரம் கேளுங்கள்.
குறிப்பு :-
தாமதமாகப் பதிவதால் உங்கள் திருமணம், தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009'-ன் படி அங்கீகரிக்கப்பட மாட்டாது.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு சார்பதிவாளர் அலுவலகம்
Comments
Post a Comment