காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளீர் களா? புகார் மனு ரசீது பெற்று எந்த ஒரு நடவடிக்கையும் இல்லையா? உங்களது புகார் மனுவை எந்த நிலையில் காவல் நிலையத்தினர் வைத்துள்ளனர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவும் புகார் மனு மீது உரிய சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவும் கீழ்க்காணும் விண்ணப்பத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்? வாருங்கள் சட்டம் கற்றுக் கொள்ளலாம் என்றும் மக்கள் பணியில் எங்கள் பாதிக்கப்பட்டோர் கழகம்
குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973
பிரிவு 157 - 2(ஆ)வின் கீழ் விண்ணப்பம்
*********************************************************
அனுப்புனர்
.........................
.........................
...........................
..........................
பெறுநர்
காவல் ஆய்வாளர் அவர்கள்,
....................... காவல்நிலையம்
...............................
ஐயா,
பொருள்: எனது மனைவி தாக்கப்பட்டது சம்பந்தமாக நான் அளித்த புகார்மீது எடுத்த நடவ்டிக்கை குறித்து.
பார்வை :
1) மனுதாரர் ஆகிய எனது புகார் மனு நாள்:..........................
2) தங்கள் நிலையத்தில் நான் அளித்த புகாருக்கு தாங்கள் அளித்த மனு ஏற்பு ரசீது எண்:........................நாள்:............................
கடந்த ................. அ்ன்று என் /மனைவி/ மகள் /மகன் /சகோதரன் /சகோதரி தாயார் /தந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பந்தமாக தங்கள் காவல்நிலையத்தில் நான் புகார் அளித்திருந்தேன். அதற்கு பார்வையில் கண்ட புகார் மனு ஏற்பு சான்றிதழ் எனக்கு வழங்கப்பட்டது. புகார் கொடுத்து சுமாராக ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. மேலும் அப்புகாரில் கண்ட எதிர்மனுதாரர் மேலும் மறைமுகமாக தாக்குவதற்கு உண்டான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணங்களால் நாங்கள் அச்சத்தோடு வாழ வேண்டியுள்ளது. பொது மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது காவல்துறையின் கடமை என மனுதாரர் ஆகிய என்னால் கருதப்படுகிறது.
புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை புகார் அளித்தவரிடம் அறிவிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157 - 2(ஆ)வில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகார் அளித்தவருக்கு இதுபோல அறிவிக்கவில்லை என்றால் நாங்கள் மேற்காணும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக மனுதாரர் ஆகிய எனக் கருதப்படும்.
எனவே மேற்கண்ட சட்டத்தின்படி எனது புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான சான்று ஆவணத்தின் உண்மை நகலை இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 76ன் எனக்கு வழங்கும்படி வேண்டுகிறேன். மேலும் மேற்காணும் புகார் மனு மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டு அதன் தகவலை எனக்கு தெரிவிக்க வேண்டுமாய் மிகவும் பணிவோடு வேண்டுகிறேன்.
மனுதார்
இணைப்பு :
1) நான் அளித்த புகாரின் நகல்
2) பார்வையில் கண்ட மனு ஏற்பு ரசீது நகல்.
நாள் : ....................
இடம் : ......................
விமானம் இந்திய சாட்சிய சட்டம் 70வது பிரிவின்படி இதையே பிரமாணமாக இதில்............................................. தேதி அன்று என்னால் கையொப்பம் செய்யப்படுகிறது
Comments
Post a Comment