கைது செய்யும் நடைமுறைகள் போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவு

கைது செய்யும் நடைமுறைகள் போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவு
*பதிவு செய்த நாள்: பிப் 05,2019* 

    *சென்னை: ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கு குறைவான சிறை தண்டனை கிடைக்கும் வகையிலான குற்றங்களில் ஈடுபட்டோர் மீது, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, போலீசாருக்கு, டி.ஜி.பி., - ராஜேந்திரன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதன் விபரம்: இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் - 41, பிரிவு, 'ஏ'வின்படி, குற்றம் செய்த ஒருவருக்கு, ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான சிறை தண்டனை கிடைக்கும் வகையில்,* *வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் போது, அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை தேவைப்படும் போது, தன் முன்பாகவோ அல்லது வேறு இடத்தில் உள்ள போலீஸ் அதிகாரி முன்னரோ ஆஜராக வேண்டும் என, குற்றம் சாட்டப்பட்டோருக்கு, அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையை, வழக்கு பதிவான இரண்டு வாரத்திற்குள் நீதிமன்றத்திற்கும் அனுப்ப வேண்டும் குற்றம் சாட்டப்பட்ட நபர், நெறிமுறைகளை கடைப்பிடிக்க தவறினாலோ அல்லது தன்னை அடையாளப்படுத்த விரும்பாவிட்டாலோ, நீதிமன்றம் பிறப்பிக்கும்* *உத்தரவை பொறுத்து, அவரை கைது செய்யலாம் குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணைக்கு ஆஜராக முடியாத சூழல் இருந்தால், அதற்கான காரணத்துடன், நான்கு நாட்களுக்குள் மாற்று நேரம் வழங்கும்படி, விசாரணை அதிகாரிக்கு, எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் நியாயமான காரணம் அல்ல என, விசாரணை அதிகாரி கருதினால், குற்றம் சாட்டப்பட்ட நபர்,* *கட்டாயம் ஆஜராக வேண்டும் என, அறிவுறுத்தலாம் குற்றவியல் நடைமுறை சட்டம் - 41, பிரிவு, 'ஏ'வின்படி, விசாரணை அதிகாரியான போலீசார், செயல்பட தவறினால், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,* *உச்ச நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கையுடன், அறிவிக்கை அனுப்புவதற்கான மாதிரி படிவங்கள், போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட, எஸ்.பி.,க்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.*
 

Comments