கேள்வி வடிவில் தகவல் கோரலாமா?
கேள்வியாக
ஆலோசனையாக
புகாராக
கோரிக்கையாக
யூகமான கேள்வியாக
தகவல் சட்ட விண்ணப்பம் தயார் செய்யலாமா?
கேள்விகளாக:
தாரளமாக கேட்கலாம். தடையேதுமில்லை.
கேள்விகளன்றி தகவல்களை கேட்பது என்பது கடினமான ஒன்றாகும். சட்டத்தில் கேள்விகள் கேட்கக்கூடாது என்று எங்குமே சொல்லப்படவில்லை.
கேள்விகள், காரணத்தை வினாவுவதாக இருக்கக்கூடாது.
ஆலோசனையாக:
அலுவலகத்தில் உள்ள உண்மைகளின் அடிப்படையில் பொது தகவல் அலுவலர் ஆலோசனை வழங்க கடமைப்பட்டவர்.
உதாரணமாக
மக்கள் நல்வாழ்வுத்துறையிடம், நாய் கடித்தால் அதற்கு தடுப்பூசி போட எங்கெல்லாம் வசதி உள்ளது?
இங்கு நல்வாழ்வத்துறையானது, அந்த வசதி உள்ள இடங்களை குறித்து மனுதாரருக்கு ஆலோசனை வழங்கலாம். மேற்படி இடங்கள் அவரது அலுவலகத்தில் material fact -ஆக உள்ளது.
புகாராக:
பிரச்சனைகள் புகாராக ஆரம்பித்து அதற்கு தீர்வு கோரலாம். அந்த தீர்வானது அந்த அலுவலகத்தில் material fact ஆக இருக்கும் பட்சத்தில். எங்களது ஊரில் அதிக அளவில் நாய்கள் தெருவில் உள்ளன. அவற்றை அகற்ற நான் யாரிடம் மனு செய்யவேண்டும் போன்ற தகவல்கள்.
கோரிக்கையாக:
தகவல்கள் கோருவதே ஒரு கோரிக்கைதான்.
யூகமான கேள்வி:
தாரளமாக கேட்கலாம். உங்கள் கேள்விக்கான தகவல் அந்த அலுவலகத்தில் இருக்கும் பட்சத்தில் அதை தர பொது தகவல் அலுவலர் கடமை பட்டவர்.
உதாரணமாக:
நீலகிரி மாவட்டத்தில் உதவி ஆட்சியர்தான் மாவட்ட நிர்வாகத்தை தற்போது கவனித்து கொள்கிறாரா? என்ற கேள்வி யூகமான கேள்விதான்.
ஆனால், நீங்கள் வினாவும்போது, அவர்தான் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்தால் அது அங்கு material fact ஆக இருப்பதால் பொது தகவல் அலுவலர் பதில் கூட கடமை பட்டவர்.
அதே சமயத்தில், தற்போதைய மாவட்ட ஆட்சியர், நிதித்துறை செயலராக செல்வாரா? என்ற கேள்வி Hypothetical question. அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை.
ஆனால், உங்களுக்கு பதில் எழுத பொது தகவல் அலுவலர் முனையும்போது, அந்த மாவட்ட ஆட்சியருக்கு நிதித்துறை செயலராக இடம் மாற்றம் வந்துவிட்டால், Hypothetical fact தற்போது material fact -ஆக மாறிவிடுவதால், அவர் பதில் சொல்ல கடமைப்பட்டவர்.
Comments
Post a Comment