#ஒப்புகை_சீட்டு_அல்லது_ஒப்புதல்_சான்று
எத்தனை அரசாணைகள் இருந்தாலும்
மக்கள் வரிப்பணத்தில் 70
சதவிதிதத்தை சம்பளமாக
வாங்கிக்கொண்டு மெத்தனம்
காட்டுகின்றனர் அரசூலியர்கள்/மக்கள் பிரதிநிதிகள் ?...
அரசு அலுவலகங்களில் புகார்/
மனுவை கையளித்திற்கான ஒப்புதல்
சான்று.
ஒவ்வொரு மனு/புகாரினை அரசு
அலுவலகத்தில் வழங்கும் போது
அதற்குரிய ஒப்புதல் சான்று வழங்கும்
நடைமுறையினை பெரும்பாலான
அரசு அலுவலகங்கள்
நடைமுறைப்படுத்துவதில்லை
அவ்வாறு நாம் வழங்கிய
ஆதாரங்களுடன் கூடிய புகார் மற்றும்
மனுக்களுக்கு அரசாணை எண்99 &
114ன்படி ஒப்புதல் ரசீது
பெறவில்லையெனில் அல்லது அவர்
வழங்க மறுத்தாரெனில் சம்பந்தப்பட்ட
அரசு அலுவலக அதிகாரி அந்த
புகாரின்/மனுக்களின் மீதோ
நடவடிக்கை எடுக்க தீர்வு
கானாதிருக்கும் பட்சத்தில் அந்த
அதிகாரி மீது சட்ட நடவடிக்கை அல்லது
மேலதிகாரியிடம் அந்த கீழ்நிலை
அதிகாரி குறித்து ஆதாரத்துடன் புகார்
அளிக்க வழிவகை இல்லாமல்
போயிவிடும்.
மேலும் இது குறித்து தகவல் உரிமை
சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார்/
மனு குறித்து நிலை பற்றி கேள்வி
கேட்க எழாத சூழல் உருவாகக்கூடும்
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க.....
1)ஒவ்வொரு புகாரின்/மனுக்களில்
இறுதிபக்கத்தில் கீழ்கண்ட
வார்தைகளை இணைத்து அந்த
புகார்/மனுக்களை நகல் எடுத்து
வைத்துக்கொள்ளுங்கள்
.....................................................................
....................................................................
மதிப்பிற்குரிய ஐயா/அம்மையாரே.
இம்மனுவினை பெற்று ஏற்று
கொண்டு இம்மனுவினை
1)அரசாணை எண் 114
நாள்:02.08.2006
2)அரசாணை எண் 66
நாள்:23.02.1983
3)அரசாணை எண் 80
நாள்:13.5.1999
4)அரசாணை எண் 99
நாள்: 21.09.2015
5) மாண்புமை சென்னை உயர்நீதிமன்ற
உத்தரவு எண் W.P.NO 20527 OF 2014
நாள்:01.08.2014ன்படி ஒப்புதல் சான்று
வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
.............................................................................................................................................
2)புகார்/ மனுக்களை வழங்கிய
பின்னர் சம்பந்தப்பட்ட அரசு அலுவலக
அதிகாரியிடம் துறை சார்ந்த ஒப்புதல்
சான்று கேளுங்கள் அவர் வழங்க
மறுத்தாரெனில் புகாரின்/மனுவின்
பக்கத்தில் இப்புகாரினை/
மனுவினை பெற்றுக்கொண்டேன் என
கையொப்பம்/தேதி மற்றும் அலுவலக
முத்திரை இட்டு தருமாறு வலியுறுத்தி
அதனை கைவசம் வைத்து
கொள்ளுங்கள் மற்றும் அந்த
கையொப்பம்/முத்திரையிடப்பட்ட
புகார்/மனுவினை நகல் எடுத்து
வைத்துக்கொள்ளுங்கள்
அல்லது
பணியாளர் மற்றும் நிர்வாக
சீர்திருத்தத்துறையினரின் ஆணை
(G.O89) பக்கத்தினை நகல் எடுத்து
வைத்துக் கொண்டு அதில் ஒப்புதல்
சான்றினை கேட்டு பெறுங்கள்
மேற்கண்ட ஒப்புதல் பெறப்பட்ட
மனுவின்/புகாரின் மீது 30−45
நாட்களில் சம்பந்தப்பட்ட துறை
அதிகாரி தகுந்த நடவடிக்கை
எடுக்காதிருக்கும் பட்சத்தில் நீங்கள்
மேலதிகாரிகளிடம் முறையிட அல்லது
சட்ட நடவடிக்கை எடுக்க மேற்கண்ட
ஆதாரம் பக்கபலமாக பலனளிக்கும்
விதத்தில் இருக்கும்
Comments
Post a Comment