நீங்கள் இதுவறை கிராம சபையின் நன்மைகள் மட்டுமே தெரிந்த உங்களுக்கு கிராம சபையில் நடக்கும் முறைகேடுகள் பற்றிய விழிப்புணர்வு பதிவு

நீங்கள் இதுவறை கிராம சபையின் நன்மைகள் மட்டுமே தெரிந்த உங்களுக்கு  கிராம சபையில் நடக்கும் முறைகேடுகள் பற்றிய விழிப்புணர்வு பதிவு
*****************************
அரசாங்க திட்டத்தில் நன்மையொன்று இருந்தால் தீமையும் இருக்கத்தானே செய்யும்.

*கிராம சபை நல்லதற்க்காக தான் உருவாக்கினார்கள்.
நல்லது தான் நடக்கும்.ஆனால் சுயமாக தானே நடக்காது அதற்க்கு சமூக சேவைமனாப்பான்மை கொண்ட நல்உள்ளங்களின் தொடர்முயற்ச்சியும் ஆதரவும் தேவை.

நமது மக்களின் முதல் பலவீனம் (சோம்பேறித்தனம்)அதுவே அவர்களது பலம்(ஊழல்).

*ஊழலின் முதல் தொடக்கமாக. கிராமும் இருக்கிறது,அடிமட்ட அரசு ஊழியர்கள் போல.

*அதாவது,உதாரணமாக தமிழ் நாட்டில் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு  கிராம ஊராட்சிக்கு தோராயமாக வருடத்திற்க்கு 50 லட்சம் முதல் 2கோடி (மக்கள் தொகைக்கு ஏற்ப) வரை வழங்கப்படுகிறது. அந்த நிதி ஊராட்சி வளர்ச்சிக்கு மத்திய மாநில அரசால் கடண்வாங்கி வழங்கப்படுகிறது.

ஆனால் இங்குதான் அந்த ஊழல் என்னும் தீப்பொறி உருவாகிறது. ஊராட்சி மன்ற தலைவருக்கு அரசால் வழங்கப்பட்ட இந்த நிதியின் சொற்ப பங்கை மட்டும் ஊராட்சி பயன்பாட்டிற்கு செலவு செய்கின்றனர். மீதி பெரும் பங்கை தங்களது பாக்கெட்டில் போட்டுக்கொள்கின்றனர்.

சரி இதனை தவிர்க்க என்ன செய்யலாம்

*இந்தியா அரசியல் அமைப்பு சட்டம் -1950 ஷரத்து 243-A "கிராம சபா" என்னும் மிகப்பெரிய - மிக சக்தி வாய்ந்த - உரிமையாக மக்களுக்கு இது வழங்ககிறது

*ஊராட்சி மன்ற தலைவரால் செலவு செய்யப்படும் ஒரு ரூபாய் கூட, கிராம சபா கூட்டத்தில் பொது மக்கள் அனுமதி வழங்கவேண்டும்

*ஆனால் கிராம சபா கூட்டம் , முறையாக கிராமங்களில் நடைபெறுவதில்லை. ஊராட்சி மன்ற தலைவர்கள் - அரசு அதிகாரிகளின் உதவியுடன் - பொய் ஆவணம் உருவாக்கி மக்களை மட்டும் ஏமாற்றம் செய்வதில்லாமல், அரசையும் ஏமாற்றுகின்றனர்.

*இங்க ஆரம்பிக்கும் இந்த பதவி ஆசை , அடுத்து கவுன்சலர்,சட்ட மன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர் என தங்களது சுயநலத்திற்க்காகஅரசியலில் ஈடுபடுகின்றனர்.என்பதே 
மறுக்க முடியாத உண்மை

*சேற்றின் மீது கல்லெரிந்தால் நம்மீதுதான் சேறு விழுமென்று நாம் ஒதுங்கி போவது இன்றய சூழலில்  நியாயம்தான்
ஆனால் இதை யார் செய்வது

*சிறு தவறுகள் செய்யும் சக மனிதனை அன்பாலோ அல்லது சட்டத்தினாலோ தண்டனை வாங்கி கொடுத்து தவறினை அறிந்து திருந்த வாய்ப்பு வழங்காததால் இன்று சிறு திருடன் பெரிய தாதாவாக வளர்ந்து நிர்க்கின்றனர்

*அது போலத்தான் இன்று சிறு அரசியல் உறுப்பினராகா  வார்டு உறுப்பினர்,ஊராட்சி மன்ற தலைவர் என தொடங்கி பின் அடுத்தடுத்த அரசியல் பதவிகளை பெற்று  (சிறு தேவையற்ற நீராக ஆரம்பித்தவர்கள் மாபெரும் அரசியல் சாக்கடையாக மாறி) நம்மை பாடாய் படுத்துகிறார்கள்.

*நாம் நல்லவராக வாழ்ந்தால் மட்டும் போதாது.  தீமை செய்பவர்களை பயமின்றி எதிர்த்து, நம்மை சுற்றியவர்களையும் நல்லவர்களாக மாற்ற வேண்டும்.அநியாயங்களை அனைவரும்  தட்டிக்கேட்க விழிப்புணர்வு ஏற்படுத்தி நாமே முன்னின்று செயல்படுவோமாக.*

*இந்தியா ஒரு மக்கள் ஜனநாயக நாடு என்பதை நாம் மத்திய மாநில அரசுகளில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.*

*காரணம் மக்கள் ஜனநாயகம் என்பது மாறி இன்று கட்சி ஜனநாயகமும் அதற்கு துணையாக முதலாளித்துவமும் இருக்கிறது
நம் இந்தியாவில்
பலகோடி மக்கள்

பலகோடி மாணவர்கள்

பல கோடி இளைஞர்கள் 

பல ஆயிரம் அலுவலர்கள் 

பல ஆயிரம் அரசியல்வாதிகள் 

இருந்தும் மாற்றம் ஏற்படாததற்கு காரணம் அவரவரின் உரிமைகள் அவர் அவர்களுக்கு தெரியாமல் இருப்பதே.

உரிமையை அறிவோம்! 

கடமையை செய்வோம்!!

மாற்றத்தை உருவாக்குவோம்!!!

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் 
நன்றி
உரிமையுடன்

#கிராமசபை_உறுப்பினராகிய_நான்
#பிக்கிலி_ஊராட்சி_முத்து

Comments