தீங்கு : வரையறை " தீங்கு " என்பதை இதுவரையிலும் , முழுமையாக - அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் - எவரும் வரையறை செய்யவில்லை .
தீங்கு : வரையறை " தீங்கு " என்பதை இதுவரையிலும் , முழுமையாக - அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் - எவரும் வரையறை செய்யவில்லை .
தீங்கு என்னும் சொல்லை வரையறுப்பது எளிதான காரியமல்ல . ஏனெனில் தீங்கியல் சட்டம் ஒரு குறிப்பிட்ட வகையான தவறுகளை மட்டும் உள்ளடக்கிய சட்டமல்ல .
அதன் அளாவுகை மிகப்பரந்தது . தீங்கியல் சட்டம் , மாறிவரும் சமூக - பொருளாதார - அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப மாறக் கூடியதாகும் .
மேலும் தீங்கியல் சட்டத்தின் மூல ஆதாரமே அவ்வப்போது வெளியாகும் நீதிமன்றத்தீர்ப்புகளாகும் . அத்தீர்ப்புகளும் காலத்திற்கு காலம் , நீதிபதிக்கு நீதிபதி மாறக் கூடியதாகும் .
எனவே தீங்கு என்பதனை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கொண்டு வர முடிவதில்லை . இருப்பினும் சில சட்ட வல்லுனர்கள் தீங்கு என்பதனை ஓரளவு வரையறுக்க முயன்றுள்ளனர் .
இங்கிலாந்து நாட்டு சட்டவியலாரான , சால்மன்ட் , “ தீங்கு என்பது , ஒப்பந்த மீறுகை ( breach of contract )
அல்லது பொறுப்புரிமை மீறல் ( breach of trust ) அல்லது தகைமை நெறியின் பாற்பட்ட கடமை மீறல் ஆகியவை அல்லாத , அறுதியிடப்படாத இழப்பீடு கோரி , பொதுச்சட்டத்தின் கீழ் வழக்கிடத்தக்க உரிமையியல் தவறு ( civil wrong ) ஆகும் ” என்று தீங்கை வரையறை செய்கின்றார் .
இவரது வரையறையின் படி
( i ) ஒப்பந்த மீறுகை
( ii ) பொறுப்புரிமை மீறல் மற்றும்
( iii ) தகைமை நெறியின் பாற்பட்ட கடமை மீறல் ஆகியவை தீங்கு ஆகாது . இவை அல்லாத , பிற உரிமையியல் தவறுகளுக்காக அறுதியிடப் படாத இழப்பீடு கோரி ( unliquidated damages ) பொதுச்சட்டத்தின் கீழ் வழக்கிட இயலுமெனில் அந்த உரிமையியல் தவறுகள் அனைத்தும் தீங்கு எனப்படும் .
இங்கிலாந்து நாட்டின் மற்றொரு சட்ட அறிஞரான , வின்ஃபில்ட் " பொதுவாக நபர்களனைவர் மீதும் சட்டத்தினால் விதிக்கப்படும் கடமைகளை ஒருவர் மீறுவதால் தீங்கியல் பொறுப்புநிலை எழுகின்றது . அக்கடமை மீறலுக்கான தீர்வழி அறுதியிடப்படாத இழப்பீடு கோரி வழக்கிடுவது ஆகும் ” என்று தீங்கை வரையறை செய்கின்றார் .
இவரது வரையறையின் படி , பொதுவாக நபர்கள் அனைவர் மீதும் சட்டம் விதித்துள்ள மன்று சுட்டிய கடமை ( duty in rem ) களை மீறுவது தீங்காகும் . " தனிநபர்கள் அல்லது சட்ட நபரத்துவம் பெற்ற கூட்டுருக்கள் , தங்களுக்குள் ஒருவருக்கெதிராக மற்றவர் கோருகின்ற இழப்பீடு அல்லது
பிறவகைப் பரிகாரங்களை வழங்குவது அல்லது வழங்க மறுப்பது தொடர்பான சட்டங்களின் தொகுப்பே தீங்கியல் சட்டமாகும் ” என்று கீடோன் மற்றும் கீடோன் வரையறுக்கின்றனர் .
இவர்கள் , தீங்கியல் சட்டத்தை வரையறுப்பதன் மூலம் , தீங்கை வரையறுக்க முயன்றுள்ளனர் .
பர்டிக் என்பவர் “ சட்டத்தால் ஒரு நபருக்கு வழங்கப்பட்ட உரிமையை சட்ட விரோதமாக மீறும் வகையில் , செய்யப்படும் செயல் ( act )
அல்லது செயல் தவிர்ப்பு ( omission ) தீங்காகும் .
தீங்கினால் பாதிக்கப்பட்ட நபர் பொதுச்சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி வழக்கிடுவதே அதற்குரிய தீர்வழியாகும் " என்று தீங்கை வரையறை செய்கின்றார் .
இவரது வரையறையின் படி ஒருவரின் சட்ட உரிமைகளுக்கு ஊறுவிளைவிப்பதே தீங்காகும் . மேலே கண்ட வரையறைகள் தவிர , இன்னும் பல்வேறு அறிஞர்கள் தீங்கு என்பதனை வரையறை செய்துள்ளனர் .
அவற்றுள் சால்மன்ட் - ன் வரையறையே இந்திய சட்டமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது . அவரது வரையறையை அடிப்படையாகக் கொண்டே , இந்திய கால வரையறை சட்டத்தில் ' தீங்கு ' எனும் சொல் வரையறுக்கப்பட்டுள்ளது ,
இந்திய காலவரையறைச் சட்டம் ( The Indian limitation Act - ) பிரிவு 2 ( m ) " ஒப்பந்த மீறுகை அல்லது பொறுப்புரிமை மீறலாக மட்டும் இல்லாத உரிமையியல் தவறு தீங்காகும் ' ' என்று வரையறுக்கின்றது . இவ்வரையறையின் படி ஒப்பந்த மீறுகையாகவும் பொறுப்புரிமை மீறலாகவும் மட்டும் உள்ள உரிமையியல் தவறுகள் தீங்காகாது . அவை அல்லாத , பிற உரிமையியல் தவறுகள் மட்டுமே தீங்காகும் .
எனவே , ஒப்பந்த மீறல் மற்றும் பொறுப்புரிமை மீறலினால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் தீங்கியல் சட்டத்தின் கீழ் வழக்கிட இயலாது .
ஒப்பந்த மீறலால் பாதிக்கப்பட்டவர் ஒப்பந்தவியல் சட்டத்தின் கீழும் , பொறுப்புரிமை மீறலால் பாதிக்கப் பட்டவர் பொறுப்புரிமைச் சட்டத்தின் கீழும் வழக்கிட்டு நிவாரணம் பெறலாம் .
முடிவாக , " ஒப்பந்தமீறுகை அல்லது பொறுப்புரிமை மீறல் அல்லாத , அறுதியிடப்படாத இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கிடத்தக்க உரிமையியல் தவறு தீங்காகும் " என்று நாம் ஒரு முடிவுக்கு வரலாம் .
ஒரு தீங்கினை உருவாக்கும் செயல் தீங்கான செயல் ( Tortious act ) எனப்படும் . அத்தீங்கான செயலைச் செய்தவர் தீங்கிழைத்தவர் ( Tort feasor ) ஆவார் .
தீங்கிழைத்தவரிடமிருந்து கோரப்படும் இழப்பீடு அறுதியிடப்படாத இழப்பீடு ( Unliquidated damages ) ஆகும் .
தீங்கினால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு ( damages ) வழங்க வேண்டிய தீங்கிழைத்தவரின் பொறுப்புநிலை தீங்கியல் பொறுப்பு நிலை ( Torious liability ) எனப்படும் .
தீங்கின் முக்கியத் தன்மைகள் ( Essentials of Tort )
தீங்கு என்பது , குற்றவியல் தவறில் இருந்து வேறுபட்ட உரிமையியல் தவறாகும் . ஆனால் ஒவ்வொரு உரிமையியல் தவறும் தீங்காவதில்லை , ஏனெனில் , ஒப்பந்த மீறுகை , பொறுப்புரிமை மீறல் போன்ற உரிமையியல் தவறுகள் தீங்காகாது .
பல்வேறு அறிஞர்களின் வரையறைகளின் அடிப்படையில் , தீங்கின் முக்கியத் தன்மைகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம் . அவை ,
( i ) உரிமையியல் தவறு ( ii ) சட்ட உரிமைக்குச் சேதம் விளைவித்தல் அல்லது சட்டக் கடமையை மீறுவது
( iii ) அறுதியிடப்படாத இழப்பீடு கோரி வழக்கிடுதல் ஆகியனவாகும் .
( i ) உரிமையியல் தவறு ( civil wrong ) தீங்கு என்பது குற்றவியல் தவறில் இருந்து வேறுபட்ட , உரிமையியல் தவறாகும் .
உரிமையியல் தவறின் அடிப்படைப் பண்புகளும் குற்றவியல் தவறில் இருந்து மாறுபட்டவையாகும் .
உரிமையியல் தவறுகளைப் பொறுத்த வரை , அத்தவறால் பாதிக்கப்பட்டவரே வாதியாக இருந்து , தவறிழைத்தவர் மீது வழக்குத் தொடர்கிறார் . வழக்கின் முடிவில் , அவ்வுரிமையியல் தவறால் பாதிக்கப்பட்ட வாதிக்கு இழப்பீடு வழங்குமாறு , தவறிழைத்த பிரதிவாதிக்கு உத்தவிடப்படுகிறது . ஆனால் குற்றவியல் தவறுகளைப் பொறுத்த வரை , அத்தவறால் பாதிக்கப்பட்டவருக்கு பதிலாக , அரசாங்கமே , தவறிழைத் தவனுக்கு எதிராக குற்ற வழக்குத் தொடர்கின்றது . குற்ற வழக்கின் முடிவில் அக்குற்றவியல் தவறால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படுவதில்லை . மாறாக தவறிழைத்தவருக்கு தகுந்த தண்டனையை வழங்குவதன் மூலம் சமுதாயத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றது .
உரிமையியல் தவறுகளும் , குற்றவியல் தவறுகளும் மன்று சுட்டிய கடமை ( duty in rem ) யை மீறுவதாலோ அல்லது மன்று சுட்டிய உரிமை ( right in rem ) க்கு ஊறுவிளைவிப்பதாலோ எழுகின்றது . இருப்பினும் , உரிமையியல் தவறுகள் ஒரு தனி நபருக்கு எதிரான தவறுகளாகும் .
குற்றவியல் தவறுகள் , சமுதாயம் முழுமைக்கும் எதிரான தவறாகும் . தாக்குதல் , தாக்கமுனைதல் , அவதூறு போன்ற தவறுகள் உரிமையியல் தவறாகவும் குற்றவியல் தவறாகவும் கருதப்படுகின்றன .
அத்தகைய தவறுகளைச் செய்தவர்கள் மீது , ஒரே சமயத்தில் , உரிமையியல் தவறுக்காக இழப்பீடு கோரியும் குற்றவியல் தவறுக்காக தண்டனை வழங்கக் கோரியும் வழக்கிடலாம் .
( i ) சட்ட உரிமைக்கு சேதம் விளைவித்தல் அல்லது சட்டக் கடமையை மீறுதல் ( Damage to legal right or breach of legal duty ) தவறான செயல் ( wrongful act ) ஒன்றின் விளைவாக , ஒரு நபரின் சட்ட உரிமைகளுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்படுத்துவது தீங்காகும் . அதுபோல , சட்டத்தால் விதிக்கப்பட்டுள்ள கடமையை மீறுவதால் பிறருக்கு இழப்பை ஏற்படுத்துவதும் தீங்காகும் .
வின்ஃபில்ட் , தனது வரையறையில் சட்டக் கடமையை மீறும் செயலே தீங்காகும் என்கிறார் .
சால்மன்ட் --தனது வரையறையில் தகைமை நெறியின் பாற்பட்ட கடமை மீறல் தீங்காகாது என்கிறார் .
இதன் பொருள் , சட்டத்தின் பாற்பட்ட கடமை மீறல் தீங்காகும் என்பதாகும் .
சட்ட உரிமைகள் என்பது , ஒரு நபருக்கு சட்டத்தால் வழங்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட உரிமையாகும் .
சட்டக் கடமை என்பது ஒருவர் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றோ , செய்யக் கூடாது என்றோ சட்டம் ஒருவர் மீது சுமத்தும் கடமையாகும் .
தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அல்லது சம்மதத்தின் பேரில் ஒருவருக்கு வழங்கப்படும் உரிமைகள் அல்லது சுமத்தப்படும் கடமைகள் சட்ட உரிமைகள் அல்லது சட்டக் கடமைகளாகாது .
எனவே அவ்வுரிமைக்கு ஊறுவிளைவிப்பது அல்லது அக்கடமையை மீறுவது தீங்காகாது .
( iii ) அறுதியிடப்படாத இழப்பீடு கோருதல் ஒரு தவறான செயலால் பாதிக்கப்பட்டவருக்கு சட்டத்தில் இருக்கும் தீர்வழி , அறுதியிடப்படாத இழப்பீடு கோருவதாக இருக்கும் போது தான் அத்தவறான செயல் தீங்காகக் கருதப்படும் .
அறுதியிடப்படாத இழப்பீடு கோரி வழக்கிடுவதே தீங்கியல் சட்டத்தின் முக்கியக் கூறாகும் .
எனவே அறுதியிடப்பட்ட இழப்பீடு ( liquidated damages ) கோருவதோ , வேறுவகை பரிகாரங்கள் கோருவதோ தீர்வழியாக இருப்பின் , அது தீங்காகாது , அறுதியிடப்படாத இழப்பீடு என்பது , இழப்பீடு கோருபவரால் , தனக்குரிய இழப்பீட்டுத் தொகை இவ்வளவு என்று , அறுதியாக கணக்கிட இயலாததும் வழக்கின் தன்மைக்கேற்ப , நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப் படுவதுமான இழப்பீடாகும் .
மாறாக , வழக்கிடும் போதே பிரதிவாதி தனக்குத் தரவேண்டிய தொகை இவ்வளவு என்று கணக்கிட இயலக்கூடிய இழப்பீடு , அறுதியிடப்பட்ட இழப்பீடு எனப்படும் .
எனவே , இன்று குற்றவியலின் பாற்பட்ட தவறுகள் யாவும் தீங்காக கருதப்படுவதில்லை . இருப்பினும் ,
தாக்க முனைதல் ( assault ) ,
தாக்குதல் ( battary ) , அவதூறு ( dafamation ) மற்றும் கவனமின்மை ( negligence ) ஆகிய குற்றவியல் தவறுகள் , தீங்கியல் சட்டத்தின் கீழ் தீங்காகவும் கருதப்படுகின்றன .
இவை ' குற்றமுறு தீங்குகள் ' ( Felonious Torts ) எனப்படும் .
தீங்கும் குற்றமும் ( Tort and crime )
தீங்கென்பது ஒரு உரிமையியல் தவறு என்பதால் , அது குற்றத்தில் இருந்து அடிப்படையில் வேறுபட்டதாகும் . தீங்கும் குற்றமும் கோட்பாடு களின் படியும் , நடைமுறைகளின் படியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை ஆகும் . ஆனாலும் இரண்டிற்கும் இடையே , சில ஒற்றுமைகளும் உள்ளன . தீங்கும் குற்றமும் , ஒருவரது மன்று சுட்டிய உரிமைகளுக்கு ஊறுவிளைவிப்பதால் அல்லது ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள மன்று கட்டிய கடமைகளை மீறுவதால் ஏற்படுகின்றன . இரண்டிலுமே நபர்களின் உரிமைகளும் கடமைகளும் சட்டத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன . தீங்கிற்கும் குற்றத்திற்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகளை , பின்வரும் தலைப்புகளின் கீழ் விவாதிக்கலாம் . அவை ,
1. தவறுகளின் தன்மை . 2. தரப்பினர்கள்
3. நோக்கம்
4. தீர்வழி (
5 தாண்ட
1. தவறுகளின் தன்மை ( Nature of wrong ) “ தவறுகள் பொதுவாக , தனிநபர் தவறுகள் ( private wrongs ) , பொதுத் தவறுகள் ( public wrongs ) என இருவகைப்படும் . தனிப்பட்ட தவறுகள் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட உரிமைகளுக்கு ஊறுவிளை விப்பதாகும் . அது பெரும்பாலும் உரிமையில் தவறுகள் எனப்படும் . பொதுத் தவறுகள் என்பது பொது உரிமைகள் மற்றும் பொதுக்கடமைகளை மீறுவது ஆகும் . பொதுத் தவறுகள் சமுதாயம் முழுமைக்கும் எதிராக இழைக்கப்படும் தவறுகளாகும் " என்று பிளாக்ஸ்டோன் கூறுகின்றார் . ஒருவரின் தனிப்பட்ட உரிமைகளுக்கு ஊறுவிளைவிக்கும் உரிமையியல் தவறுகளே தீங்காகும் . மாறாக சமுதாயம் முழுமைக்கும் எதிராக இழைக்கப்படும் பொதுத் தவறுகளே குற்றமாகும் . தாக்கமுனைதல் , தாக்குதல் , அவதூறு போன்ற தவறுகள் தீங்கியல் சட்டத்தின் கீழ் தீங்காகவும் , குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகவும் கருதப்படும் தவறுகளாகும் . இருப்பினும் இத்தவறுகளைப் பொறுத்த
பகுதி , பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவிடலாம் . அக்குற்றம் தீங்கியல் சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரத்தக்க தீங்காகவும் இருந்தால் , அவர் தீங்கியல் சட்டத்தின் கீழும் இழப்பீடு கோரி வழக்கிடலாம் .
அவ்வாறு தீங்கியல் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கும் போது , அவர் பிரிவு 357 ன் கீழ் குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் இழப்பீடாகப் பெற்ற தொகையையும் கணக்கில் கொள்ள வேண்டும் .
5. தண்டனை ( Punishment ) குற்றவியல் சட்டத்தின் கீழ் , குற்றமிழைத்தவருக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது சிறைத்தண்டனையும் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும் .
அரசால் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டாலன்றி , அவர் தண்டனைக்காலம் முழுவதும் சிறையில் இருந்தாக வேண்டும் . தீங்கியல் சட்டத்தின் நோக்கம் , தீங்கினால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வகை செய்வதேயொழிய , தீங்கிழைத்தவரை தண்டிப்பது அல்ல .
இருப்பினும் உரிமையியல் நடைமுறைச் சட்டம் ( C.P.C ) பிரிவு 55 ன் கீழ் , நீதிமன்றம் செலுத்தச் சொன்ன இழப்பீட்டை செலுத்தத் தவறும் பிரதிவாதியை , உரிமையியல் சிறை ( civil prison ) யில் அடைத்து வைக்கலாம் . ஆனால் உரிமையியல் சிறையில் அடைப்பதன் நோக்கம் தீங்கிழைத்தவரைத் தண்டிப்பதல்ல .
மாறாக நீதிமன்றம் அவரைச் செலுத்துமாறு உத்தவிட்ட இழப்பீட்டுத் தொகையை வாதிக்குச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதே அதன் நோக்கமாகும் . எனவே சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட காலம் முடிவடையும் முன்னரே , அவர் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி விட்டால் , அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டு விடுவார் .
குற்றமுறு தீங்கு ( Felonious Tort ) தீங்கியல் சட்டத்தின் கீழ் தீங்காகவும் , குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகவும் கருதப்படக்கூடிய தவறுகள் அனைத்தும் குற்றமுறு தீங்கு எனப்படும் . தாக்குதல் , தாக்க முனைதல் , முறையற்ற சிறைவைப்பு , அவதூறு , தீயநோக்குடைய குற்றவழக்கு போன்ற தவறுகள் , தீங்காகவும் குற்றமாகவும் கருதப்படும் குற்றமுறு தீங்குகளாகும் .
ஒரு நபரை தாக்குவதாலும் தாக்க முனைவதாலும் , உடல் ரீதியாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அவரது உரிமை மீறப்படுகிறது . எனவே அச்செயல் ஒரு தீங்காக கருதப்படுகின்றது .
அதேசமயம் , அவரைத் .
தாக்குவதாலும் , தாக்க முனைவதாலும் , சமூக பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் ஊறுவிளை விக்கப்படுகின்றது . எனவே அச்செயல் தக குற்றமாகவும் கருதப்படுகின்றது .
குற்றமாகவும் தீங்காகவும் கருதப்படும் குற்றமுறு தீங்கினைச் செய்தவர் ஒரே சமயத்தில் குற்றவியல் சட்டத்தின் கீழும் தீங்கியல் சட்டத்தின் கீழும் பொறுப்பேற்க வேண்டும் .
அக்குற்றமுறு தீங்கினால் பாதிக்கப்பட்டவர் , தீங்கிழைத்தவர் மீது தீங்கியல் சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி வழக்கிடலாம் . அதே சமயம் , அவர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்கும் தொடரலாம் . ஒரு குற்றமுறு தீங்கிற்காக இழப்பீடு கோரும் போது , தீங்கியல் சட்டக்கோட்பாடுகளும் , குற்றவழக்குத் தொடரப்படும் போது குற்றவியல் சட்டக் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் .
தீங்கை குற்றத்துடன் இணைக்கும் கோட்பாடுகள் ( Doctrine of merger of Tort in felony ) குற்றமுறு தீங்கிற்காக ஒருவர் , ஒரே சமயத்தில் குற்றவியல் சட்டத்தின் கீழும் தீங்கியல் சட்டத்தின் கீழும் பொறுப்புக்குள்ளாக்கப் எ படுவார் . ஒரே செயலுக்காக , ஒருவரை ஒரே நேரத்தில் இருவிதமான மீ பொறுப்பு நிலைக்கு உள்ளாக்குவது , அவருக்கு இரட்டைத்துன்பம் - விளைவிப்பதாகும் என்ற கருத்து சிலகாலம் நிலவியது .
எனவே “ குற்றமுறு - தீங்கிற்காக இழப்பீடு கோரி வழக்குத் தொடரும் நபர் , தீங்கிழைத்தவர் மீது , முதலில் குற்றவழக்குத் தொடர்ந்து அதில் ஒரு முடிவு காணப்பட்ட பின்னரே , தீங்கியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் " எனும் கோட்பாடு நீதிமன்றத்தால் வகுக்கப்பட்டது . இக்கோட்பாடே தீங்கை குற்றத்துடன் இணைக்கும் கோட்பாடு என்று அறியப்பட்டது . Smith -Vs- Selwyn , ( 1914 ) 3KB 98 , - என்ற வழக்கில் குற்றமுறு தீங்கை செய்தவர் மீது குற்றவழக்கு தொடரப்படாமல் தீங்கியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர் இயலாது . எனவே , அத்தீங்கிற்காக குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டு அதில் ஒரு முடிவு காணப்படும் வரையிலும் அத்தீங்கியல் வழக்கு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது .
ஆனால் , இங்கிலாந்தில் இயற்றப்பட்ட , “ 1967 ஆம் ஆண்டு குற்றவியல் நீதிச்சட்டம் ” ( The criminal justice Act , 1967 ) -ன் மூலம் தீங்கை குற்றத்துடன் இணைக்கும் கோட்பாடு நிராகரிக்கப்பட்டது . இச்சட்டம் குற்றமுறு தீங்கிற்காக இழப்பீடு கோருபவர் , அதற்கு முன்னதாக தவறிழைத்தவர் மீது குற்ற வழக்கு தொடர்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியது .
இந்தியாவைப் பொறுத்த வரை , தீங்கை குற்றத்துடன் இணைக்கும் கோட்பாடு என்றுமே ஏற்றுக் கொள்ளப் படவில்லை . Abdul - vs - Mera , ( 1881 ) 4 mad 410 என்ற வழக்கில் , குற்றமுறு தீங்கிற்காக இழப்பீடு கோரி வழக்கிடுபவர் , தவறிழைத்தவர் மீது அத்தீங்கிற்காக குற்றவியல் வழக்கு தொடராமலேயே , இழப்பீடு கோரி வழக்கிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது .
தீங்கும் ஒப்பந்த மீறுகையும் ( Tort and breach of contract )
இங்கிலாந்து நாட்டில் , அத்துமீறல் நீதிப்பேராணைகளின் மூலம் தீங்கியல் சட்டம் வளர்ந்து கொண்டிருந்த அதே காலத்தில் தான் , ஒப்பந்த நீதிப்பேராணைகள் மூலம் ஒப்பந்தவியல் சட்டமும் வளர்ந்து கொண்டிருந்தது .
தீங்கும் ஒப்பந்த மீறுகையும் உரிமையியல் தவறுகளாகும் . இருப்பினும் ஒப்பந்த மீறுகை அல்லாத உரிமையியல் தவறே தீங்காகும் என்று சால்மன்ட் கூறுகின்றார் .
தீங்கியல் வழக்கிலும் , ஒப்பந்த மீறுகையிலும் பாதிக்கப்பட்ட நபரே நேரடியாக வழக்கிடுகின்றார் . இவ்விரண்டு வழக்குகளிலுமே தீர்வழியாக தவறிழைத்தவரிடமிருந்து இழப்பீட்டுத் தொகையே கோரப்படுகின்றது .
தீங்கிற்கும் ஒப்பந்த மீறுகைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை நாம் கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் விவாதிக்கலாம் .
1. கடமை ( duty ) சட்டத்தால் உருவாக்கப்பட்ட சட்டக் கடமைகளை மீறுவது தீங்காகும் . ஆனால்
தரப்பினர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தக் கடமைகளை மீறுவது ஒப்பந்த மீறுகையாகும் . தீங்கியலில் , சட்டத்தால் உருவாக்கப்படும் கடமை மக்கள் அனைவருக்கும் பொதுவான கடமையாகும் .
எனவே அக்கடமையை மீறும் அனைவரும் தீங்கியல் பொறுப்பு நிலைக்குள்ளாவார்கள் . ஆனால்
ஒப்பந்தவியலில் , தரப்பினர்களின் ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்படும் கடமைகள் , அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நபர்களை மட்டுமே கட்டுப்படுத்தும் .
Comments
Post a Comment