ஏற்கெனவே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு, அரசாணை எண் - 2906, வருவாய்த்துறை, நாள் - 4.11.1981 மற்றும் அரசாணை எண் - 581, வருவாய்த்துறை, நாள் - 3.4.1987 மற்றும் அரசு கடித எண் - 1534, வருவாய்த்துறை, நாள் - 28.11.1991 ஆகியவை மூலமாக கூறியுள்ளது.
தற்போது வாரிசு சான்றிதழ் வழங்குவது கணிணி மயமாக்கப்பட்டு விட்டது. எனவே தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு துறை 9.8.2017 ஆம் தேதியில் புதிதாக வாரிசு சான்றிதழ் வழங்குவது குறித்து ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன் எண் - 11/2017, ந. க. எண் - வ. நி. 5(3)/180/2017 ஆகும்.
இதன்படி வட்டாட்சியர் வழங்கிய வாரிசு சான்றிதழில் ஏதாவது முரண்பாடுகள் ஏற்பட்டு, திருத்தம் செய்ய வேண்டுமென்றால் சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் சம்மந்தப்பட்ட கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும்.
வாரிசு சான்றிதழை மாற்றியமைக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ வேண்டுமென்றால் சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்து கொள்ள வேண்டும்.
இதுவே தற்போதைய நடைமுறைகள்
Comments
Post a Comment