காவல் துறை மீது பொதுமக்களால் கூறப்படும் பொதுவான குற்றச்சாட்டு காவல் நிலையத்தில் புகார் மனுக்களை கொடுக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாமலும்.

39.காவல் நிலையாணை எண்:865 -09-06-1997
தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் பிறப்பித்த நிலை ஆணை (முதல் தகவலறிக்கை தொடர்பாக)
பொருள்: காவல் துறை – பொதுமக்கள் புகார் மனுக்கள் ஏற்புச் சான்றிதழ் வழங்குதல் -ஆணை -வழங்கப்படுகிறது.

பார்வை: அரசாணை (நிலை) எண்:865 உள் (காவல்.1)துறை, நாள்:09-06-1997.

1.காவல் துறை மீது பொதுமக்களால் கூறப்படும் பொதுவான குற்றச்சாட்டு காவல் நிலையத்தில் புகார் மனுக்களை கொடுக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாமலும் வழக்கு பதிவு செய்வதில் தாமதப்படுத்துவதும் ஆகும்.இந்த குற்றச்சாட்டு காவல் துறையின் மதிப்பை மக்கள் மத்தியில் குறைக்கிறது.இக்குறையை களைவதற்கு அரசு,  மேற்காணும் ஆணையின் தெளிவான உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.அரசு ஆணை நகல் விவரம் பின்வருமாறு

2.அரசு உத்தரவானது
(அ)      பொதுமக்கள் அளிக்கின்ற புகார் மனுக்களை பெற்றுக்கொண்டு புகார் மனு ஏற்பு சான்றிதழ்களை உடனடியாக வழங்கவேண்டும்.எக்காரணம் கொண்டும் எந்தவிதமான தாமதம் இருக்கக்கூடாது.
(ஆ)      குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டி இருந்தாலும் மற்றும் சமுதாய பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவேண்டியிருந்தாலும் இந்தச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும்.
(இ)       வழக்கு பதிவு செய்தால் குற்ற எண்ணும் குற்றப்பிரிவு குறிப்பிடவேண்டும்.
(ஈ)       முதல் தகவல் அறிக்கை நகல் வழங்கப்படவேண்டும்.
(உ)      இரயில்/பேருந்தில் பயணம் செய்யும் போது ஏற்படுகின்ற குற்றப்புகார் குறித்த மனுக்களை எந்த காவல் நிலையத்தில் கொடுத்தாலும் பெற்றுக்கொண்டு ,அந்த காவல் நிலைய எல்லைக்குள் குற்றம் சம்பந்தப்படாததாக இருந்தால், சம்பந்தப்பட்ட எந்த காவல் நிலையத்திற்கு புகார் மனு அனுப்பப்படுகிறது என்ற விபரத்தை புகார் மனு ஏற்புச் சான்றிதழில் கட்டாயம் தெரிவிக்கவேண்டும்.
(ஊ)         இந்த ஆணை 09-07-1997க்குள் கட்டாயமாக எல்ல காவல் நிலையங்களிலும் அமுல்படுத்தப்பட வேண்டும்.
(எ)          காவல் நிலையங்களை பொதுமக்கள் புகார்களுடன் அணுகும்போது பிரச்சனைகள் ஏதும் இருந்தால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சி தலைவருக்கும்,காவல் ஆணையர்/மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தபால் மூலம் இது குறித்து புகார்களை அனுப்பாலம்.இந்த செய்தியை பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டி அறிவிக்கவேண்டும். தபாலில் பெறப்படும் இத்தகு புகார்களை ஒரு தனிப்பதிவேட்டில் ( மாதிரி இணைக்கப்பட்டுள்ளது) பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவல் அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

3.   இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்பால் உறுதிமொழி எடுத்து செயல்படும் காவல் துறை அலுவலர்கள் பொதுமக்களின் நலன் கருதி வெளியிப்பட்டுள்ள இந்த அரசாணையை சீரிய முறையில் நீறைவேற்றப்படவேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.

4.   நடைமுறைப்படுத்த தவறுபவர்கள் “ நேர்மை”  (Integrity)க்கு தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்டு அவர்களுடைய வருடாந்திர சுமுக்க அறிக்கையில் ( Annual confidential Report ) குறிப்பிடப்படவேண்டும்.மேலும் அவர்கள் மீது துறை ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்.

5.    எல்லா உயர்மட்டக் காவல் அதிகாரிகளும் காவல் நிலையங்களை ஆய்வு செய்யும் போது இந்த ஆணையை முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை அவசியம் கண்காணிக்கவேண்டும்.

6.       இந்த ஆண்டு முழுமையாக நிறைவேற்றப்பட்டதற்கான அறிக்கையை கட்டாயம் 30-06-1997க்குள் அனுப்பவேண்டும்.... 

7.      ஒவ்வொரு மாதமும் நடைபெறும் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த ஆணையின் செயல்பாட்டினை பரிசீலிக்கவேண்டும்.

8.     இந்த ஆணை பெற்றுக்கொண்டதற்கு ஒப்புதல் உடன் அனுப்பவேண்டும். Courtesy... Ramachandran baskar (மீள் பதிவு)

Comments