பார்ட்டி இன் பெர்ஷனின் பணி என்ன? சட்டம் தெரிந்துகொள்வோம்.

பார்ட்டி இன் பெர்ஷனின் பணி என்ன?                சட்டம் தெரிந்துகொள்வோம்.

வழக்கு நடத்துகிற வக்கீல் வழக்கறிஞர்கள் சட்டம் 1961 ன் படி தனது கட்சிக்காரர், எதிர்க்கட்சிகள், நீதிமன்றம் அப்படின்னு பல கடமைகளை செய்யணும் ,

அதுபோல  நீங்க ( பார்ட்டி இன் பெர்ஷன்) ஒவ்வொருவரும் பணியை ஆராய்ந்து  செய்யணும் அப்பதான் நீதி எல்லோருக்கும் நிலைக்கும்

 தேவையில்லாத விஷயங்களை நீதிமன்றத்தில் புகுத்தக் கூடாது ,மறு தரப்பினர் புகுத்தினால் ஆட்சேபனை செய்யணும், மேலும் நீங்க புகுத்தி அது தேவையில்லாதது என நான் நிரூபித்தால் குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 340 கீழ் நீதி நடவடிக்கையை பாதிக்க செய்த குற்றத்துக்காக நடவடிக்கை எடுக்கலாம் அப்படிங்கிற உறுதிமொழியை வாங்கிக்கிங்க,இதுபோல பார்ட்டி இன் பெர்ஷன் எல்லாம் கேட்டாலே யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க. தேவையில்லாத விவாதங்கள் நடைபெறாது.

 நியாயம் இருக்கிற வழக்கில் நியாயத்தை நிலைநாட்ட ஒரு வாய்ப்புதான்னு இல்ல, பல வாய்ப்புகள் கிடைக்கும் அந்த வாய்ப்பு எப்ப எப்படி வரும்னு காத்துக்கிட்டு இருந்து உடனே டக்குன்னு புடிக்கணும்,

 அனாவசியமாக வாய்தா வாங்குவதை தடுத்து நிறுத்தனும், அதேபோல எந்த வழக்கு நடத்துறமோஅந்த சட்டத்தை மட்டுமே இல்லாம மத்த முக்கியசட்டங்களையும் நீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்புரைகளையும் படிக்கனும். அப்பதான் வழக்கு நடத்த நமக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

 எதிர்க்கட்சிகாரர்களுக்கு சட்டத்துக்குப் புறம்பான வகையில் வக்கில் யாராவது ஆலோசனை சொல்லி இருந்தால் அவரை இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 126 கீழ் சாட்சியாக அழைத்து விசாரிக்கனும்,

 நீதிபதிகள் யாராவது சட்டத்துக்கு புறம்பாக ஏதும் நடந்தால் அதற்காக பயந்திட கூடாது, அதுக்கு மாறா அதை எப்படி சமாளிப்பது என்று யோசித்து மிகத் துரிதமாக செயல்படவேண்டும். ஒருவேளை நோட்டீஸ் விட்ட மாதிரி இருந்தா குற்ற விதி108ன்கீழ் விடணும், ஏன்னா அது தான் அவருக்கும் இயற்கை நீதி வாய்ப்பளித்தது போலாகும், 

                   இந்த பிரிவில் எந்த நீதிபதி நோட்டீஸ் வாங்கினாலும் கண்டிப்பா அவங்ககிட்ட நியாயம் இருந்தா பதில் கொடுத்துடுவாங்க அப்படி இல்லாம உங்களை மிரட்ட நினைச்சா சட்டப்படி அதிகாரம் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிபதி (GJ M) கிட்ட புகார் செய்யலாம். அப்படி செய்தால் உங்களை குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைத்து நடத்தைக்கான கடப்பாட்டு ஆவணம்எழுதி கேட்பாங்க இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதாதா உங்களுக்கு?

 சரி வாய்ப்பு கிடைக்கலேன்னா  என்ன பண்றது? அவருக்கு என்று ஒரு சரித்திரம் உண்டாக்க அதை புத்தகமா போட்டுட வேண்டியதுதான், அதோட தகுதி வினவும் நீதிப் பேராணை வழக்கு,குவாவாரண்டோவழக்கு (தகுதி முறை வினவும் நீதிப் பேராணை வழக்கு) தொடுத்துவிடுங்கள்,

 உங்களோட தாய்மொழி என்னவோஅதிலேயே மனு அளிக்கலாம், அப்படிங்கறது அரசியல் சாசன கோட்பாடு 350 சிறப்பான நெறிமுறை.
 அதனால அதை பயன்படுத்த தவறாதீர்கள்,

முக்கியமா சாட்சி சொன்னது கரெக்ட்டா தட்டச்சு பண்ணி இருக்கான்னு பார்த்து கையெழுத்து போடுங்க இல்லாட்டி தலையெழுத்தே மாறிவிடும் திருத்தம் செய்ய வேண்டியிருந்ததால் கையெழுத்து போட உங்களுக்கு உரிமை இல்லை என்கிறது நல்லா ஞாபகம் வச்சுக்குங்க நீங்க பார்வையிட உரிமை உள்ள எந்த ஒரு ஆவணத்தையும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 76 கீழ் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்களே உங்கள் வழக்கில் வாதாட இந்திய அரசியல் அமைப்பு சட்டம் - 1950 இன் 19 ( 1 ) மற்றும் கு.வி.மு.ச. 1973 இன் 2 (17) இன்னு இன்னும் நிறைய சட்டம் உங்களுக்கு துணையாக நிற்கும்.

Comments