ஆவணங்களின் சான்றிட்ட நகல் அலுவலகங்களில் கிடைக்க பெறுவதற்கு வாய்ப்பிருக்கும் பொழுது அந்த ஆவணங்களின் அசலை நீதிமன்றத்திற்கு வரவழைக்கும்படி மனுத்தாக்கல் செய்ய முடியாது. 

நீதிமன்றமல்லாத வேறு அலுவலகத்திலிருந்து ஆவணங்களை வரவழைப்பதற்கு, உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 76 ன் கீழ் மனுதாக்கல் செய்ய வேண்டும். 

ஆவணங்களை ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வரவழைப்பதற்கான மனுவை உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 13 விதி 10 ன் கீழ் தாக்கல் செய்ய வேண்டும். 

ஒரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு கட்டிலிருந்து மற்றொரு வழக்கு கட்டிற்கு ஆவணங்களை வரவழைப்பதற்கும் மனுத்தாக்கல் செய்யலாம்.

Comments