உழவர் கடன் அட்டை-pm-kisan &
மத்திய அரசின் காப்பீடுதிட்டம் ======================================= பயிர் சாகுபடி செய்வதற்கும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பிற்கு மத்திய அரசு உழவர் பாதுகாப்பு கடன் அட்டை வழங்க உள்ளது.இத்திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவர் ஈட்டுறுதி இல்லாமல் ரூ.1,60,000 வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் கடன் பெற்றுக்கொள்ளலாம். கடனை 5 ஆண்டுக்குள் செலுத்த வேண்டும்.
மேலும் 7 % (58-பைசா) வட்டியுடன் கடன் வழங்கப்படும். உரிய காலத்திற்குள் கடன் தொகையை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3 (24-பைசா)சதவீத வட்டித்தொகை சலுகையாக (மானியமாக) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 4 (34-பைசா) சதவீத வட்டி மட்டுமே செலுத்தினால் போதுமானது. உழவர் கடன் அட்டை பெற உரிய விண்ணப்பத்துடன்
* ஆதார் அட்டை,
* நிலஉரிமை ஆதாரம்(கம்ப்யூட்டர் சிட்டா)
* வங்கி சேமிப்புகணக்கு
ஆகியவற்றை கொடுத்து 2 வார காலத்திற்குள் பெற்று கொள்ளலாம். உழவர் கடன் அட்டை 5 ஆண்டு வரை செல்லத்தக்கது.
எனவே அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் கடன் அட்டை பெற்று இடுபொருட்கள் தேவையினை பூர்த்தி செய்து உற்பத்தியை பெருக்கலாம். எனவே உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பத்துடன் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கடன் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
Comments
Post a Comment