RTI : அலுவலர்கள் பணியில் சேர்ந்த நாள், ஒய்வு பெறும் நாள், கல்வி தகுதிகள் ஆகியவற்றை வழங்க வேண்டும் மற்றும் பணியாளர்கள் மீது எடுத்த துறைரீதியான நடவடிக்கை விபரங்கள் வழங்கக்கூடியது எனவும், பணியாளர் மீது துறை ரீதியாக எடுத்த நடவடிக்கையின் இறுதி ஆணையை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.
.
தற்போதைய கோவிட் பெருந்தொற்று காலத்தில், தமிழ்நாடு தகவல் ஆணையமானது தொலைபேசியில் விசாரண நடத்தி அல்லது அளித்துள்ள மேல் முறையீட்டின் அடிப்படையில் தகவல்களை வழங்க உரிய ஆணைகளை பிறப்பித்து வருகின்றது. அவ்வாறான ஆணைகள் பிறப்பிக்கும்போது, ஒரு தேதியை குறிப்பிட்டு அந்த தேதிக்குள் தகவல் வழங்கவேண்டும் எனவும், அவ்வாறு தகவல் பெறப்படாவிட்டால் ஒரு தேதியை குறிப்பிட்டு அந்த தேதிக்குள் ஆணையத்தை திரும்பவும் அணுக அறிவுத்துகின்றார்கள்.
.
இணைக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் 07.07.2021 அன்று பிறக்கப்பிக்கபட்ட ஆணையில் தகவல்களை 27.07.2021-க்கு வழங்க உத்திரவிடப்பட்டிருந்தது. தகவல் வழங்கப்படாவிட்டால், 09.08.2021-க்குள் ஆணையத்திற்கு தெரியப்படுத்த குறிப்பிடப்பட்டிருந்தது. தகவல் கிடைக்க பெறாத மேல்முறையீட்டாளர் 08.08.2021 அதனை ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு சென்றதில், 07.09.2021 அன்று அந்த வழக்கு திரும்பவும் விசாரணக்கு எடுத்து கொள்ளப்பட்டு மேற்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
.
சமூக ஊடகங்களில், தகவல் ஆணையம் ஆணையிட்ட பிறகும் தகவல் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. அவ்வாறு பெறப்படவில்லை என்றால், அதனை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றால், மேற்கண்ட வழக்கினைபோல், உடனடியாக திரும்ப வழக்கினை (ஒரு மாதத்திற்குள்) விசாரணைக்கு எடுத்து தகவல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, தமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை இட்ட பிறகும் தகவல் பெறாதவர்கள், ஆணையம் குறிப்பிட்ட தேதிக்குள் அவர்களிடம் திரும்பவும் முறையீடு செய்து, மறு விசாரணை கோரலாம்.
Comments
Post a Comment