RTI- மூன்றாம் நபர் தகவல்

(இந்த பாராவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் தோழர்)

இந்திய அரசமைப்பு சட்டம் 1950 இன் பிரிவு 13(3) இன் படி,அரசு ஆணைகளை, நீதிமன்ற தீர்ப்புரைகளை, வழிகாட்டு அறிவுரைகளை அனைவரும் சட்டமாகவே மதித்து செயல்படவேண்டும்.
அதன்படி, கீழ்க்காணும் தகவல் ஆணைய தீர்ப்புரைகளை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.நான் கோரியுள்ள தகவல்களை மூன்றாம் நபர் தகவல் என்று நீங்கள் நிராகரிக்க இயலாது என்ற விபரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசு ஊழியரின் அந்தரங்க விசயங்கள் தவிர்த்து, அவரது பணி விவரங்களை கோரினால், வழங்க வேண்டும், TNSIC, வழக்கு எண். 58407 / விசாரணை / எப் / 2013, 29-01-2015

Service Register is a record of public service and cannot be refused under 8(1)(j), Case No :8413 /Enquiry/10, 18.08.2010, Thanks to Mr. Manikandan vathan

அரசு ஊழியரின் பணி, நியமனம் & சம்பளம் போன்றவை, சட்டப்பிரிவு 4(1)(b)-ன் கீழ் வழங்க வேண்டியவை, சட்டப்பிரிவு 11-ன் கீழ் தனி நபர் / இரகசிய தகவல் அல்ல, TNSIC, வழக்கு எண். 502233 / விசாரணை / சி / 2013, 17.12.2014

பணியில் சேர்ந்த தேதியில் பதியப்பட்ட விவரங்கள் வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். 41146 / E / 2014, 29-04-2015

Comments