RTI கிராமத்தின் அனைத்து தனிநபர் கழிவறை கட்டப்பட்டதன் விபரம் கேட்பதற்கு மனு...!

வணக்கம் நண்பர்களே...!

Rti கிராமத்தின் அனைத்து தனிநபர் கழிவறை கட்டப்பட்டதன் விபரம் கேட்பதற்கு மனு...!
அனுப்புநர் :-

XXXXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXXX
XXXXXXXXXXX
XXXXXXXX
XXXXX

பெறுநர் :-

பொது தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
_______________________மாவட்டம்.

ஐயா, அம்மா வணக்கம்....

பொருள் :- 

மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வரும் இந்திய குடிமகனான எனக்கு கீழ்க்கண்ட தகவல்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் பிரிவு 6(1)-ன் கீழ் வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

1) ____________மாவட்டம், __________ வட்டம், ____________ ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கடந்த 2014 முதல் 2020 வரை தனிநபர் இல்ல கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல் ஆண்டு வாரியாக அலுவலக பதிவேட்டில் உள்ள அனைத்து நகல் வழங்கவும்.

2) மேற்குறிப்பிட்ட தனிநபர் இல்ல கழிப்பறை பணி குறித்த ஒப்பந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் மற்றும் முகவரி வழங்கவும்.

3) மேற்குறிப்பிட்ட தனிநபர் இல்ல கழிப்பறை ஒப்பந்த ஏலத்தை நடத்தி ஒப்பந்த தாரரை தேர்வு செய்த அதிகாரியின் பெயர்,பதவி, மற்றும் அலுவலக முகவரி அலுவலக பதிவேட்டில் உள்ள தகவல் வழங்கவும்.

4) மேற்குறிப்பிட்ட தனிநபர் இல்ல கழிப்பறையின் நீளம், அகலம்,உயரம் உள்ளிட்ட தொழில் நுட்ப விபரங்கள் அடங்கிய அளவுப்புத்தகம் நகல் வழங்கவும்.

5) தனிநபர் இல்ல கழிப்பறையின் தொழில்நுட்பத்தையும், அளவுகளையும்,தரத்தையும், சோதனை செய்து சான்றிதழ் வழங்கிய அதிகாரியின் பெயர்,பதவி,அலுவலக முகவரி, தொலைபேசி எண் விபரம் வழங்கவும்.

6) ஒரு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு தேவைப்பட்ட மூலப்பொருள் விவரங்களின் நகல் வழங்கவும்.

7) மேற்கண்ட தனிநபர் இல்லா கழிவறை எந்த ஆண்டு (work name) (construction of ihhl for benifcery name) கழிவறை கட்டப்பட்டது.

8)கட்டியதிற்கான காசோலை யார் மூலம் யாருக்கு வழங்கப்பட்டது
என்ற தகவல்கள் முழு முகவரியுடன் தகவலாக வழங்கவும்.         
    
9) மேற்படி கழிவறை கட்டிடத்தின் அருகில் நிற்கும் இரண்டு வகையான புகைப்படங்கள் (photos) ஒளி நகல் வழங்கவும். 

ஒரு பொது தகவலை ஒருவர் கேட்கும் போது அந்த தகவலை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக வெளியிடவும் அந்த தகவலை கொடுக்கவும் அரசு உயர் அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன் என்ற தகவல் வழங்கவும்.

இப்படிக்கு.

நன்றி....!

Comments