அனுப்புனர்
B.கருப்பசாமி,
மாவட்ட தலைவர்,
தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம்,
விருதுநகர் மாவட்டம்
பெறுநர்
உயர்திரு.மாவட்ட ஆட்சியர்,
விருதுநகர் மாவட்டம்
அன்புடையீர், வணக்கம்
பொருள்: VAO மீதான
புகார்களை
விசாரிக்க
குழு அமைப்பது
சம்மந்தமாக.
பார்வை: WP (MD) 1396/
2019/ dt.01.07.
2019.
பார்வையில் கண்டுள்ள வழக்கில் மாண்பமை உயர் நீதி
மன்றம் மதுரை கிளை தனது தீர்ப்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரும் புகார்
களை விசாரிக்க மாவட்ட அளவில் 3அலுவலர்களை கொண்ட குழு அமைத்து VAOக்கள் மீது வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பகரப் பட்டுள்ளது, அதன் அடிப்படையில் மாவட்டந் தோறும் அமைக்கப்பட்ட குழுவின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட
குழுவின் பட்டியல் இதுவரை வெளியிடவில்லை, எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட குழு அமைக்கா விட்டால் உடனடியாக மேற்படி குழுவை அமத்து பட்டியல் வெளியிட வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்.
ஏற்கனவே குழு அமைத்திருந்தால் அக்குழுவின் பட்டியலை வெளியிட வேண்டுமாய் வேண்டப் படுகிறது.
தங்கள் உண்மையுள்ள
B.கருப்பசாமி,
மாவட்ட தலைவர்
த த அ ச ஆர்வலர்கள் சங்கம்
விருதுநகர் மாவட்டம்,
அலைபேசி:9443436331
Comments
Post a Comment