காவல் நிலையத்தில் உள்ள கடந்த 09.10.2020 தேதிய FIR index பதிவேடு நகல்

"ஒப்புதலுடன் பதிவஞ்சல்"

மனுதார்:





பெறுநர்:
திரு.பொதுத் தகவல் அலுவலர் அவர்கள்,
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 ,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், 
திருப்பூர் -
திருப்பூர் மாவட்டம்

அய்யா / அம்மையீர்,
பொருள் :
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 இன் 6 ( 1 ) வது பிரிவு படி வேண்டுகோள் விண்ணப்பம் .

1, கீழ்க்காணும் தகவல்களுக்கான ஆவணங்களானது மனுதாரின் புகார் மனு மீதான வழக்கு தொடர்பான ஆவணங்களாகும் இந்த ஆவணங்களை உறுதியிட்ட உண்மை சான்று நகல்களாக வழங்கி உதவ வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கப்படுகிறது.

அ) திருப்பூர் மாவட்டம், மூலனூர் காவல் நிலையம், கு.எண்.... ... ....., / 2020 U/s........  இ.த.ச. நாள் : 09.10.2020, கு.எண்............  2020 U/s........ இ.த.ச. ஆகிய வழக்குகளின் புகார் மனுவின் நகல்கள், FlR நகல்கள் .

ஆ) மூலனூர் காவல் நிலையத்தில் உள்ள கடந்த 09.10.2020 தேதிய FIR index பதிவேடு நகல்

இ) மூலனுார் காவல் நிலையத்தின் கு.எண்........ /2020 U/s...... இ.த.ச. 09. 10. 2020 வழக்கின் எதிரியை காவல் நிலையப் பிணையில் விடுவித்த Bail Bond ரிஜிஸ்டர் நகல் .

ஈ) மூலனூர் காவல் நிலையத்தின் கடந்த 09.10.2020 தேதி முதல் 21.04.2021 தேதி வரையிலான Crime Cauge Register நகல் .

உ) மூலனுார் காவல் நிலையத்தின் கடந்த 09.10.2020 தேதி முதல் 22.04.2021 தேதி வரையிலான Village Register பதிவேடு நகல் .

ஊ) மூலனூர் காவல் நிலையத்தின் Process Register கடந்த 09.10.2020 தேதி முதல் 22.04.2021 தேதி வரையிலான நகல் .

எ ) மூலனூர் காவல் நிலையத்தின் கடந்த 09.10.20020 தேதி முதல் 22.04.2021 தேதி வரையிலான Current Register நகல் .

ஏ) மூலனூர் காவல் நிலையத்தின் PSO 706 இல் வகுத்துரைக்கப்பட்ட விதிகளின்படி பதிவு செய்யப்படும் பொது நாட் குறிப்பு (General Dairy) கடந்த 09.10.2020 தேதி முதல் 12.10.2020 தேதி வரையிலான பதிவு நகல்கள் .


ஐ) மூலனூர் காவல் நிலையத்தில் P.S.O.715 காவல்துறை நிலை ஆணைகளின்படி பதிவிடும் படிவம் எண் 103 இன் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேட்டின் கடந்த 09.10.2020 தேதி முதல் 22.04.2021 தேதி வரையிலான பதிவேட்டின் நகல்கள்.

ஒ) மூலனூர் காவல் நிலையத்தின் காவல் நிலை ஆணை (PSO)எண்.725 இன் படியான படிவம்  107 உயர் அலுவலர் பார்வை பதிவேட்டின் கடந்த 08. 10. 2020 தேதி முதல் 22.04.2021 தேதி வரையிலான பதிவேட்டின் நகல்கள் .


2, மேற்காணும் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ ஆகிய 10 இனங்களுக்கான தகவல்களை பெறுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 இன் கட்டண விதிகளின்படி ரூ.10/=க்கான கோர்ட்டு பீஸ் ஸ்டாம்ப் இம்மனுவோடு ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி இருப்பின் அவற்றை உரிய கேட்பு விபரத்தாளுடன் எனக்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

3. ஆகையால் தயவு செய்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 இன் 7 ( 1 ) வது பிரிவில் வரையறுக்கப் பட்ட காலங்களுக்குள் மேற்காணும் தகவல்களை உறுதியிட்ட உண்மைச் சான்று நகலாக வழங்கி உதவ வேணுமாய் மனுதாரால் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கப்படுகிறது.

                         மனுதார்

தேதி:
இடம்:

Comments