Chief Information Commr & Anr vs. State of Manipur & Another (Manu/SC/1484/2011) Decided On: 12.12.2011 என்ற மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் வழங்கப்படவில்லை என்றால் இரண்டு தீர்வுகளை தகவல் ஆணையத்திடம் மனுதாரர் கோரலாம். 1) பிரிவு 18(1)-கீழ் புகார் அளிப்பது 2) பிரிவு 19(3)-ன் கீழ் மேல் இரண்டாம் மேல் முறையீடு செய்வது. இரண்டும் தீர்வுகளையும் தனித் தனியாக மனுதாரர் கோரலாம்.
.
மத்திய தகவல் ஆணையத்தின் இணையத்தளத்தில் கீழ்கண்ட லிங்கில் https://cic.gov.in/complaint-guidelines புகார் அளிக்கும் நடைமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் புகாரானது எவ்வாறு இரண்டாம் மேல் முறையீடாக எடுத்து கொள்ளப்படும் என்று கீழ்கண்டவாறு ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
.
Registration of Complaint as second appeal
.
During scrutiny of Complaint, if it is found that Complainant has requested for the information along with the imposition of penalty, the complaint would be registered as Second Appeal, provided first appeal had been filed by the Complainant.
அதன்படி, மத்திய தகவல் ஆணையத்தில் பெறப்பட்ட புகாரினை பரிசீலிக்கும்போது,
.
a) புகார்தாரரானவர் தகவல் வழங்க கோரியும், அதனுடன் சேர்த்து தண்டனை வழங்க கோரியும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தால், மற்றும்
.
b) ஏற்கனவே முதல் மேல் முறையீடும் செய்திருந்தால்,
.
அவரது புகாரானது மத்திய தகவல் ஆணையத்தால் இரண்டாவது மேல் முறையீடாக பதிவு செய்யப்படும்.
.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியவை, மேற்படி இரண்டு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டிந்தால் மட்டுமே புகாரானது இரண்டாம் மேல் முறையீடாக மாற்றப்படும்.
.
(குறிப்பு: தகவல் ஆணையத்தில் புகார் அளிக்கும் முன், மத்திய தகவல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ள புகார் அளிக்கும் நடைமுறைகளை மேற்படி லிங்கில் ஒரு முறை படித்து கொள்ளுங்கள்)
Comments
Post a Comment