இந்தியவில் மக்கள் பிரதிநிதிதுவ சட்ட மன்ற அமைப்பின் இருபிரிவுகளாக பிரிக்கலாம். 1773 முதல் 1858 வரையான கம்பெனி நிர்வாக காலம் எனவும், 1858 முதல் 1947 வரையிலான இங்கிலாந்து ராணியின் நேரடி ஆட்சி காலம் எனவும் பிரிக்கலாம.
இந்தியவில் மக்கள் பிரதிநிதிதுவ சட்ட மன்ற அமைப்பின் இருபிரிவுகளாக பிரிக்கலாம். 1773 முதல் 1858 வரையான கம்பெனி நிர்வாக காலம் எனவும், 1858 முதல் 1947 வரையிலான இங்கிலாந்து ராணியின் நேரடி ஆட்சி காலம் எனவும் பிரிக்கலாம
ஒழுங்குமுறை சட்டம் 1773
இந்தியாவில் உள்ள கம்பெனி நிர்வாக பகுதிகளை நிர்வகிக்க பிரிட்டிஷ் அரசு இயற்றிய முதல் சட்டம் எனலாம். இதன்படி தனித்தனியாக நிர்வகிக்கப்பட்ட சென்னை, பாம்பே, பெங்கால் மாகாணங்கள் ஒன்றினைக்கப்பட்டது . பெங்கால் மாகாணம் அரசின் தலைமை எனப்பட்டது. அதன் கவர்னர் பதவி தலைமை ஆளுநராக ( GOVERNER GENERAL ) உயர்த்தப்பட்டும் ,ஒர் பிரிட்டிஷ் இந்திய மைய அரசை உருவாக்குவதற்க்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கவர்னர் ஜெனரலுக்கு உதவும் பொருட்டு நான்கு நபர்கள் கொண்ட செயற்குழு ( EXECUTIVE COUNCIL ) உருவாக்கப்பட்டது. இம்மன்றத்தின் பெரும்பான்மையை பொருத்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்…
பிட் இந்திய சட்டம் 1784
இச்சட்டம் மூலம் பிரிட்டிஷ் இந்திய கம்பெனியின் வணிக மற்றும் அரசாங்க பணிகளை மேற்பார்வையிடவும், கட்டுபடுத்தவும் தனித்தனி மன்றங்கள் கம்பெனியில் உருவாக்கப்பட்டன. இதனால் கம்பெனியின் வணிக நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அரசாட்சி சார்ந்த நடவடிக்கைகளிலும் தனிகவனம் செய்ய வழிவகைசெய்யப்பட்டது .மேலும் கம்பெனியின் இந்திய மாகாணங்களில் முதன் முதலாக ஒர் ஆளுநர் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒர் ஆட்சிமன்றம் இச்சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது..
பட்டயச் சட்டம் 1833
இச்சட்டத்தின் மூலம் பிரிட்டிஷ் இந்திய பகுதியின் பெங்கால் தலைமை ஆளுநர் பதவி இந்திய தலைமை ஆளுநராக ( GOVERNER GENERLA OF INDIA) , பதவி உயர்வு செய்யப்பட்டது.. மேலும் மெட்ராஸ் மற்றும் பாம்பே மாகாண ஆளுநர்களிடமிருந்த சட்டமியற்றும் அதிகாரம் பறிக்கப்பட்டு கவர்னர் ஜெனரல் ஆப் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.. இதற்க்கென கவர்னர் ஜெனரல் ஆப் இந்தியாவின் நான்கு பேர் கொண்ட நிர்வாக சபையின் சட்டமியற்றுவதற்கென சட்ட அறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.. இச்சட்டப்படி மக்கள் அறிந்து கொள்ள கவர்னர் ஜெனரலின் நிர்வாக சபையின் நடவடிக்கைகளை தொகுத்து அரசிதழில் வெளியிடவும் அடிகோலியது. இச்சட்டம் வணிக அமைப்பாக இருந்த பிரிட்டிஷ் இந்திய கம்பெனியை ஒர் நிர்வாக அமைப்பாக மாற்றும் முயற்சிகளுக்கு வித்திட்டது எனலாம்
பட்டயச் சட்டம் 1853
தலைமை ஆளுநரின் நிர்வாக சபையிலிருந்து முதன் முதலில் சட்டமியற்றும் பணிகளுக்கென ஒர் சட்டமியற்றும் கவுன்சில் உருவாக்கப்பட்டது. இந்த கவுன்சிலில் .சட்டமியற்றுவதற்க்கான ஆறு நபர்கள் கொண்ட சட்டமியற்றும் கவுன்சில் உருவாக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் எல்லாம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உள்ளவாறே பின்பற்றன. இந்த ஆறு நபர்களில் நான்கு பேர் மெட்ராஸ், பாம்பே, ஆக்ரா, பெங்கால் மாகாணஅரசாங்கத்தால் தங்கள் மாகாண பிரதிநிதிகளாகவும், இரண்டு நபர்கள் நேரடிகாயகவும் நியமிக்கப்பட்டனர்.. இச்சட்டம் சட்டமியற்றும் மன்றத்தில் முதன் முதலாக பிரதிநிதிதுவ முறையை பின்பற்ற வழிவகைசெய்த்தது. மேலும் இதுவே பின்னர் மாகாண அளவில் தனித்தியங்கும் சட்டமன்றம் உருவாக காரணமாகவும் இருந்தது
– பிரேம்செல்வா
Comments
Post a Comment