உ. வி. மு. ச கட்டளை 18 விதி 18 ன் கீழ் ஒரு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வழக்கு சொத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு அதிகாரம் உள்ளது என "ராஜ் நரேன் ராய் Vs சாதுராய் (AIR-1995-ALLH-351)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

உ. வி. மு. ச கட்டளை 18 விதி 18 ன் கீழ் ஒரு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வழக்கு சொத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு அதிகாரம் உள்ளது என "ராஜ் நரேன் ராய் Vs சாதுராய் (AIR-1995-ALLH-351)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 
உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு நீதிமன்றம் "சகம் சிங் Vs கெசரிமால் (AIR-1971-SC-2540)" என்ற வழக்கில், உ. வி. மு. ச கட்டளை 18 விதி 18 ன் கீழ் ஒரு வழக்கு சொத்தை நேரில் ஆய்வு செய்வது நீதிமன்றத்தின் விருப்பத்திற்குட்பட்டது. நீதிமன்ற ஆணையாளர் தாக்கல் செய்த அறிக்கை மற்றும் வரைபடம் ஆகியவை குறித்து மேலும் தெளிவு பெற வேண்டுமென்கிற நிலையிலும் சரியான தீர்ப்பு வழங்க அத்தகைய ஆய்வு தேவைப்படும் என்கிற நிலையிலும் நீதிமன்றம் வழக்குச் சொத்தை நீதிமன்றம் நேரில் ஆய்வு செய்வதில் தவறில்லை. 
நீதிமன்றத்தின் விருப்பமானது வழக்கின் சாட்சிகளை பொறுத்து அமைந்திருக்க வேண்டும். 
உ. வி. மு. ச கட்டளை 18 விதி 18 ன் படி ஒரு நீதிமன்றம் ஒரு வழக்கு எந்த நிலையில் இருந்தாலும் வழக்கு சொத்தை நேரில் சென்று ஆய்வு செய்யலாம் எனக் கூறுகிறது. அது மேல்முறையீட்டு நீதிமன்றங்களுக்கும் பொருந்தும். இருந்தபோதிலும் அவ்வாறு ஆய்வு செய்வது நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது. வழக்கு சொத்தின் உண்மை நிலையை கண்டறிய வேண்டியிருந்தால் மட்டுமே நீதிமன்றம் நேரில் ஆய்வு செய்யும். 
வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கை மற்றும் வரைபடத்தை கொண்டே நீதிமன்றம் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும். வழக்கறிஞர் ஆணையர் என்பவர் நீதிமன்றத்தின் அதிகாரியாக செயல்பட்டு நீதிமன்றத்திற்குள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துபவர் ஆவார். அவர் நீதிமன்ற அதிகாரி என்கிற வகையில் சுதந்திரமாக செயல்பட்டு ஒரு வழக்கு சொத்தை ஆய்வு செய்து அறிக்கை மற்றும் வரைபடம் ஆகியவற்றை தாக்கல் செய்கிறார். இருதரப்பினரும் ஆணையர் சொத்தை ஆய்வு செய்ய வரும்பொழுது குறிப்புகள் கொடுத்து ஆய்வு செய்ய கோர முடியும். அதேபோல் ஆணையர் நீதிமன்றத்தில் அறிக்கை மற்றும் வரைபடத்தை தாக்கல் செய்தவுடன் அதுகுறித்து ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதோடு ஆணையரை ஒரு சாட்சியாகவும் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியும். 
அதேபோல் கீழமை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி உ. வி. மு. ச கட்டளை 18 விதி 18 ன் கீழ் ஒரு வழக்கு சொத்தை பார்வையிட முடியும். அதேபோல் வழக்கு நடத்துபவர்கள் நீதிபதி பார்வையிட்டு தாக்கல் செய்த அறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் முடியும். ஆனால் வழக்கு சொத்தை பார்வையிட்ட நீதிபதியை ஒரு சாட்சியாக அந்த நீதிமன்றத்தின் முன்பு விசாரிக்க முடியாது. இத்தகைய குழப்பங்களை தவிர்ப்பதற்காக ஒரு வழக்கு சொத்தை நீதிபதி நேரில் ஆய்வு செய்வதை கட்டாயமாக ஆய்வு செய்ய வேண்டுமென நிர்பந்திக்க முடியாது. அது நீதிமன்றத்தின் விருப்பத்திற்குட் பட்டதாகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 
CRP. NO - 2485/2012 
P. S. ரங்கராஜன் Vs K. G. பாண்டுரங்கன், தலைவர், HIG Flat Owners Welfare Association 
2012-4- LW-CIVIL-844

Comments