உரிமைகளிலேயே மிக முக்கியமானது குடிமக்களுக்கு அளிக்கப்படும் சுதந்திர உரிமைகளே ஆகும் அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 19(1)ன் அடிப்படையில் அதிலும் குறிப்பாக ஷரத்து 19(1)(b) என்னவென்றால் ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் .

உரிமைகளிலேயே மிக முக்கியமானது குடிமக்களுக்கு அளிக்கப்படும் சுதந்திர உரிமைகளே ஆகும் அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 19(1)ன் அடிப்படையில் அதிலும் குறிப்பாக ஷரத்து 19(1)(b) என்னவென்றால் ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் 

எப்படி என்றால் 1) இவ்வாறு கூடுவது அமைதியான முறையில் இருக்க வேண்டும் 
2) கூட்ட நபர்களில் யாரிடமும் ஆயுதங்கள் இருக்கக் கூடாது 

அந்த கூட்டம் ஷரத்து 19(3)ன் படி நியாயமான கட்டுப்பாடுகளின் கீழ் அக்கூட்டத்தின் நோக்கமானதாக இருத்தல் வேண்டும். அதேபோல் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்கெதிராகவோ அல்லது பொது அமைதியின் நலனுக்கெதிராகவோ இருத்தல் கூடாது. இதனை மீறினால் 19(1)(b)ன் பாதுகாப்பை பெற இயலாது. 

அதேபோல் 1976ஆம் ஆண்டின் அரசியலமைப்பு திருத்தச் (42வது திருத்தம்) சட்டமானது இந்தியக் குடிமக்களுக்கு ஷரத்து 51-A வில் பத்து அடிப்படைக் கடமைகளை தொகுத்து வழங்கியுள்ளது. 

அதில் 51-A (g)ல் ஒவ்வொரு குடிமகனுக்கு அவரது கடைம என்னவென்றால் "காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வன வாழ்க்கை உள்ளிட இயற்கை சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் மற்றும் வாழும் உயிரினங்களுக்காக இரக்கம் கொள்ளுதல்" இது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.

 சட்டம்

Comments