காவல் நிலையத்தினரின் கட்ட பஞ்சாயத்து அச்சுறுத்தலில் இருந்தும் , கடன் கொடுத்தவரின் அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாப்பு வழங்க கோருதலும் கு. வி. மு. ச.1973 இன் 2(4) இன்படி மற்றும் 190(அ) பிரிவுப்படி குற்ற முறையீட்டு விண்ணப்பம் .

கனம் குற்றவியல் நடுவர் நீதி மன்றம்
                                                   நிலக்கோட்டை
                           ஆண்டு பட்டிகை எண்........................./2021
                           பல்வகை மனு எண்............................./2021

1) R. விஜய் 
S/O ரவிச்சந்திரன்
5_2_19/45-C, அரண்மனை கோட்டை வழி தெரு
நிலக்கோட்டை
திண்டுக்கல் மாவட்டம்.                                                      /மனுதார்கள்/

2) P. பாண்டி கண்ணன் ( வயது 24 ) ,
S / o . பாண்டி ,
12-1-51B , ஸ்ரீராஜ காளியம்மன் கோவில் தெரு ,
புதுப்பட்டி ,
நிலக்கோட்டை - 624 208 ,
திண்டுக்கல் மாவட்டம் .
கைபேசி எண் : 9629825087 

                                                                                     / எதிர்/
1 )திரு காவல் ஆய்வாளர் அவர்கள் ,
சீர்மிகு , காவல் நிலையம் ,
நிலக்கோட்டை
திண்டுக்கல் மாவட்டம் .

2)  R. மதுக்குமார் .
த /பெ.S ராஜாங்கம் ,
70 , வீரகாளியம்மன் கோயில் தெரு ,
ஜெய்ஹிந்த் புரம் ,
மதுரை 6250 11
செல் : 9942422750 .                                    /எதிர்மனுதார்கள் /


சீர்மிகு.நிலக்கோட்டை காவல் நிலையத்தினரின் கட்ட பஞ்சாயத்து அச்சுறுத்தலில் இருந்தும் , கடன் கொடுத்தவரின் அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாப்பு வழங்க கோருதலும்  கு. வி. மு. ச.1973 இன் 2(4) இன்படி மற்றும் 190(அ) பிரிவுப்படி குற்ற முறையீட்டு  விண்ணப்பம் .

1 )  மனுதாராகிய நான் திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை , 5_2_19/45-C, என்ற முகவரியில் குடியிருந்து வரும் ரவிச்சந்திரனின் மகனான விஜய் வயது 23ஆகிய நான் வழங்கும் அபிடவிட்டு சத்திய பிராமாணம் யாதெனில் ,

 2 )   மனுதாராகிய நான் மற்றும் . P. பாண்டி கண்ணன்S/O பாண்டி 12_1_51B ஸ்ரீ ராஜகாளி அம்மன் கோவில் தெரு புதுப்பட்டி  நிலக்கோட்டை , திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரியில் குடியிருந்து வரும் நபரும் இணைந்து சுயதொழில் செய்வதற்கு மேற்காணும் 2 வது எதிர்மனுதாரான மதுக்குமார் என்பவரிடம் ரூ .7,00,000 / - ( ரூபாய் எழு இலட்சம் மட்டும் ) 2020 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடனாக பெற்றுள்ளோம். அந்த தொகையை கொண்டு அசோக் லேலண்ட் குரு 1111 என்ற 6 சக்கர வாகனம் எண் TN 58AQ 1703 அதன் R. C. Book எண்.Chassis no. MB 1AUPTC 7HP AZ5520, Engine No. HBEZ 204570  Owner Name. P. Pandikannan ஆகும். மேற்படி வாகனத்தை விலைக்கு வாங்கி டிரைவர் ஒருவரை பணியமர்த்தி அவ்வாகனத்தை வாடகைக்கு விட்டு சாம்பாதித்து வருகிறோம். 
கொரோனா ஊாடங்கு காரணமாக எந்தவொரு வருமான வேலை வாய்ப்பும் இல்லாததால் எங்களால் மேற்படி கடனை முழுமையாக  உடனடியாக திருப்பி செலுத்த இயலவில்லை .

 3 )  மேலும் மேற்படி கடன் தொகையை திருப்பி செலுத்த மேற்படி 2 வது எதிர்மனுதாரரிடம் கால அவகாசம் வழங்குமாறு கோரியும் எங்களுக்கு கால அவகாசம் வழங்காமல் உடனடியாக கடனை திருப்பி செலுத்துமாறு வற்புறுத்தி வந்தார் . இந்நிலையில் மேற்படி 2 வது எதிர் மனுதார்க்கு எனது  நண்பர் பி. பாண்டி கண்ணன் வங்கி கணக்கிலிருந்து பாரத ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கணக்கு எண் : 36519396666 என்ற கணக்கில் இருந்து மேற்படி 2 வது எதிர்மனுதாரர் திரு . R. மதுக்குமார் . அவர்களின் HDFC வங்கி கணக்கில் கடந்த 7.12.2020 ம் தேதியில் ரூ .30,000 / -மும் , கடந்த 06 : 02.2021 ம் தேதியில் ரூ .10,000 / மும் ஆக மொத்தம் ரூ .40,000 / மும், மேலும் மனுதாரர் ஆகிய நான்  கடந்த 2021 ஜனவரி மாதத்தில் ரூ .30,000 / -மும் கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ .20,000 / -மும் , கடந்த 2021 ம் ஆண்டு மே மாதம் ரூ .10,000 / -மும் ஆக ரூ .60,000 + ரூ .40,000 ஆக மொத்தம் ரூ .1,00,000 / - ரூபாய் ஒரு இலட்சம் கடனை திருப்பி செலுத்தியுள்ளோம் . இதற்கு ஆதாரங்களும் , சாட்சியங்களும் உள்ளது.

4 ) மேலும் மேற்காணும் 2 வது எதிர்மனுதாரர் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் வழங்கி இப்புகார் தொடர்பாக கடந்த 20.08.2021 இரவு 8.00 மணிக்கு  காவல் நிலைய விசாரணையில் நிலைக்கோட்டை காவல் நிலையத்தினர் எங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமல் நாங்கள் இதுவரை செலுத்திய பணம் ரூ.1,00000/ (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) குறிப்பிடாமல் நாங்கள் பெற்ற கடன் தொகை முழுவதையும் ரூ.7,00000/ (ரூபாய் ஏழு இலட்சம் மட்டும்) மனுதாராகிய (பாண்டி கண்ணன்) என்பவரும் விஜய் என்பவரும் தர வேண்டும் பணம் கொடுக்கும் வரை மேற்படி வாகனத்தை காவல் நிலையத்தில் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் ஒரு குறிப்பிட்ட தினங்களுக்குள் பணம் செலுத்திய பின் எங்களது வாகனத்தை எடுத்துக்கொள்கிறோம்  என மனுதாராகிய எங்கள் இருவரிடமும் கட்டாயப் படுத்தி எழுதி பெற்றுள்ளனர்.

அதன் பின்னர் எனக்கு கடந்த 18.09.2021 தேதி மதியம் 01.35 PM மணிக்கு காவல் நிலையத்தில் இருந்து எனது கைபேசி எண்.9715625087 க்கு 7010530890 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது. அதான் பின்னர் 18.09.2021 ஆம் தேதி மதியம் 02.06 PM மணிக்கு 7010530890 என்ற எண்ணில் காவல் நிலையத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்தார்கள். பின்பு என் அலைபேசி பழுதாக இருந்ததால் அவர்களுக்கு மீண்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை மேலும் மேற்படி கடன் தொகையை கேட்டுவிசாரணை என்ற பெயரில் நிலக்கோட்டை காவல் நிலையம் , CSR:No.368/2021 என்ற மனு மீது விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்று கூறி நிலக்கோட்டை காவல் நிலையத்தினர் கடந்த 14.09.2021 ம் தேதி எனது கைபேசியில் உள்ள வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பாணை அனுப்பி உள்ளனர் . அதில் 17.09.2021 ம் தேதி மாலை 05.00 மணிக்கு நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பி உள்ளனர் .

 5) மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பு இல்லாமல் வருமானம் இல்லாமல் இருந்து வந்த நாங்கள் தற்போது கடந்த 2 மாதமாக பாண்டி கண்ணன் திருப்பூரிலும் விஜய் கோயம்புத்துரில்  உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம் . நிலக்கோட்டை காவல் நிலைய விசாரணைக்கு கடந்த 17.09.2021 ம் தேதி செல்வதற்கு எனது பணியாற்றும் நிறுவனத்தில் விடுமுறை கிடைக்காததால் சிறிது கால அவகாசம் கோரி நிலக்கோட்டை காவல் நிலையத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் மனு அனுப்பி உள்ளேன் தற்போதும் 18.03.2021 ம் தேதியானது கைபேசி எண் 6380000911                 என்ற கை பேசி எண்ணுக்கு 7010530880 என்ற கைபேசி எண்ணில் இருந்து காவல் ஆய்வாளர் அழைத்து நீ கண்டிப்பாக வருகிற 20.09.2021 ம் தேதி காலை 11.00 மணிக்கு காவல் நிலையத்திற்கு நேரில் வர வேண்டும் என்றும் , அன்று வாகனத்தை காவல் நிலையத்தில் ஒப்பாடைக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு வர தவறினால் உங்கள் இருவர் மீதும் வழக்கு தொடுப்பேன் என்றும் காவல் ஆய்வாளர் கூறினார்.  என்னிடம் சாட்சிய ஆவணமாக கைபேசியில் காவல் ஆய்வாளர் பேசிய ஆடியோ ஆதாரம்  உள்ளது . மேலும் கடந்த 29.09.2021  தேதி மாலை 06.39 PM மணிக்கு நிலைக்கோட்டை காவல் ஆய்வாளர் 8778115482 என்ற கை பேசி எண்ணில் இருந்து எனது கைபேசி எண் 9629825087 க்கு அழைத்து வருகிற 30.09.2021 தேதியன்று காலை 10.00 மணிக்குள் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராக வில்லை என்றால் உங்களை குடும்பத்தோடு வழக்கு தொடுத்து சிறையில் அடைப்பதாக மிரட்டி வருகிறார். இதன் காரணங்களால் எனக்கு திருப்பூரிலும், கோயம்புத்தூரிலும் உள்ள மனுதாராகிய நாங்கள் இருவரும் பணியாற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பறிபோகும் ஒரு அசாதாரண சூழ்நிலையில் உள்ளேன். மேலும் இதன் காரணங்களால் எனது குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

6) நேர்மையான புலன்விசாரணை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும் புலன்விசாரணை அதிகாரி நேர்மையற்ற முறையில் ஒருதலைபட்சமாக விசாரிக்க முடியாது என்றும் புலன்விசாரணை நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வழக்கு எண். 2013- Crl. L..J. 1011 இல் ஒரு மகத்தான தீரப்புரை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புரைக்கு விரோதமாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் நேர்மையற்ற விசாரணை மேற்கொண்டு கட்ட பஞ்சாயத்து செய்து வருகிறது. மேலும் உரிமையியல் சம்மந்தப்பட்ட புகார்களை விசாரிக்க குவிமுச சட்டப் பிரிவு 149 ன்படி காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் பிடியாணை வேண்டும் குற்றம் சம்மந்தப்பட்ட புகார் மற்றும் சிவில் புகார்களை , ஒரு மனுவாக கருதி காவல்துறையினர் விசாரிக்கலாம் .என்றும் ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது . என்றும் இதுபோன்ற மனுக்களை விசாரித்து நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி மனுவை முடிக்க வேண்டும் .என்றும் சென்னை உயர் நீதி மன்றம் வழக்கு எண் Geetha @ Sharmila and others Vs The Inspector of Police , , W6 , AWPS , Ashoknagar , CHENNAI - CRL . OP . NO - 5426/2009 , dated - 3.4.2009. என்ற வழக்கில் தீர்ப்புரைத்துள்ளது. மேற்காணும் தீர்ப்புரைகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 இன் 14 வது பிரிவுப்படி எனது இந்நிர் வழக்கிற்கும் பொருந்தும் என மனுதாராகிய என்னால் கருதப்படுகிறது.

7)  ஆகையால் அருள்கூர்ந்து சமூகம் இதில் தலையிட்டு மேற்படி 1 வது எதிர்மனுதாரான நிலக்கோட்டை காவல் ஆய்வாளரின் கட்ட பஞ்சாயத்து அச்சுறுத்தலில் இருந்தும் மேற்காணும் 2 வது எதிர்மனுதாரரின் அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாப்பு வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேணுமாயும், மேற்படி 2 வது எதிர்மனுதாரிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் பெற்று தர வேணுமாயும் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கிறேன் .
                                                                                         மனுதாரர்

இடம்
 
தேதி 

இம்மனு இந்திய சாட்சிய சட்டம் 1872 ன் 70 வது பிரிவுபடி இதையே பிரமாணமாக இதில் 19/9/2021ம் தேதியன்று என்னால் கையொப்பம் செய்யப்படுகிறது .
 
                                                                   

                                    

Comments