கு.வி.மு.ச-1973 இன் 297 எவர் முன்னிலையில் உறுதிமொழி ஆவணம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளது.
கு.வி.மு.ச-1973 இன் 297 எவர் முன்னிலையில் உறுதிமொழி ஆவணம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளது.
*********************************************************************
** 297(1) இந்தச் சட்டப்படி ஒரு நீதிமன்றர்த்தில் பயன்படுத்த்த்தக்க உறுதிமொழி ஆவணங்களுக்காக.......
*** (அ) ஒரு நீதிபதி அல்லது குற்றவியல் நடுவர்
அல்லது
*** (ஆ) உயர்நீதிமன்றம் அல்லது அமர்வு நீதிமன்றம் நியமித்துள்ள சத்தியப் பிரமாண ஆணையர் அல்லது...
*** (இ) நோட்டரீஸ் சட்டப்படி நியமிக்கப் பட்டுள்ள நோட்டரி
ஆகியோர் முன்னிலையில் சத்தியம் செய்யலாம் அல்லது உறுதிமொழி தரலாம்.
**** (2) உறுதிமொழி ஆவணங்க்ளில் தமது சொந்த அறிவிலிருந்து நிரூபிக்கத்தக்கவற்றை மட்டுமே தரவேண்டும் தாம் உண்மையென்று நம்பத்தக்க காரணம் உள்ளவையாக அவை இருக்க வேண்டும். அப்படி தாம் நம்புவதற்குரிய காரணங்களை அவர் குறிப்பிட வேண்டும்.
*** (3) உறுதிமொழி ஆவணத்தில் காணப்படும் தொடர்பில்லாதவற்றையும், வசைச் சாட்டாக உள்ளவற்றையும் நீக்குமாறு அல்லது திருத்துமாறு நீதிமன்றம் உத்தவிடலாம்.
நோட்டரி பப்ளிக் முன்னிலையில் மட்டுமே சத்தியப் பிரமாணம் உறுதிமொழிப் படிவம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பத்ல்ல மேலே காணும் சட்டப் பிரிவுகளை பயன் படுத்துங்கள் நண்பர்களே!
Comments
Post a Comment