கு.வி.மு ச-1973 இன் 314. வாதுரைகள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளது
(1) ஒரு நடவடிக்கையின் தரப்பினர் எவரும் தம் சாட்சியம் முடிவடைந்தவுடன் சுருக்கமாக வாய் மொழியில் தமது வாதுரைகளை கூறலாம் மற்றும் வாய்மொழி வாதுரையை முடிப்பதற்கு முன்னர், எழுத்து மூலமாக தம் கட்சியை எடுத்துரைக்க சுருக்கமாகவும் தெளிவான தலைப்புகளில் தமது வாதுரையைச் சமர்ப்பிக்கலாம். அப்படி அளிக்கப்படும் வாதுரை வழக்கின் கோப்பில் இடம் பெற வேண்டும்
(2) அத்தகைய வாதுரையின் நகலை உடனே எதிர்த்தரப்பினருக்கு அளிக்க வேண்டும்
(3) எழுத்து மூலமான வாதுரைகளை சமர்ப்பிப்பதற்காக நடவடிக்கையினை ஒத்திப் போடக்கூடாது . அத்தகைய ஒத்திவைப்பு தேவையென்று அந்த நீதிமன்றம் கருதினால் அதற்குரிய காரணங்களை எழுதி வைத்து பின்னர் ஒத்தி வைக்கலாம்.
(4) வாய்மொழி வாதுரைகள் சுருக்கமாகவும், தொடர்புள்ளதாகவும் இல்லை என்று அந்த நீதிமன்றம் கருதுமிடத்து, அத்தகைய வாதத்தினை ஒழுங்குபடுத்தலாம்.
என வாதுரை குறித்து (ஆர்க்யூமெண்ட்) குறித்து எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்று ஒழுங்குபடுத்தியுள்ளது
Comments
Post a Comment