கு.வி.மு.ச. 1973 இன் 321 வது பிரிவு , குற்றச்சாட்டைத் திரும்பப் பெறல். குறித்து விவரிக்கின்றது.

கு.வி.மு.ச. 1973 இன் 321 வது பிரிவு , குற்றச்சாட்டைத் திரும்பப் பெறல். குறித்து விவரிக்கின்றது.

 ஒரு வழக்கிற்குப் பொறுப்பேற்றுள்ள உதவிக் குற்றம் சாட்டுநர் அல்லது அரசு தரப்புக் குற்றம் சாட்டுநர் நீதிமன்றத்தின் அனுமதியுடனும் , தீர்ப்புரை நிகழ்த்தப்படுவதற்கு முன்னரும் , ஒரு நபர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சார்த்தைப் பொதுவாகவும் அல்லது அவர் மீது விசாரணையிலுள்ள குற்றங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை , குற்றச்சாட்டுகளிலிருந்து விலக்கிக் கொள்ளலாம் ; அப்படி விலக்கப்பட்டதால்

 ( அ ) குற்றச்சார்த்து வனை வதற்கு முன்னர் அப்படிச் செய்யப்பட்டிருந்தால் , எதிரியை அத்தகைய குற்றம் அல்லது குற்றங்களிலிருந்து விடுவிக்க வேண்டும் . 

( ஆ ) குற்றச் சார்த்து வனையப்பட்ட பின் அப்படி , விலக்கப்பட்டாலும் அல்லது இந்தச் சட்டிப்படி குற்றச் சார்த்து ஒன்றும் வனையப்பட வேண்டிய தேவை இல்லாதபோதும் , அத்தகைய குற்றம் அல்லது குற்றங்களிலிருந்து அவரை விடுதலை செய்ய வேண்டும் . 

ஆனால் அத்தகைய குற்றம் . 

( i ) யூனியனின் நிர்வாக அதிகாரம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் அல்லது , 

( ii ) டெல்லி ஸ்பெஷல் போலீஸ் எஸ்டாபிளிஷ்மெண்ட் அல்லது டெல்லி ஸ்பெஷல் போலீஸ் எஸ்டாபிளிஷ்மெண்ட் சட்டப்படி புலனாய்வு செய்யப்பட்டிருந்தால் , அல்லது , 

( iii ) மத்திய அரசுக்குச் சொந்தமான ஒரு சொத்தை அழித்தல் , நாசம் விளைவித்தல் அல்லது கையாடல் சம்பந்தப் பட்டிருந்தால் , அல்லது , 

( iv ) தமது ஆற்றுவதாகச் சொல்லிக் கொண்டு அல்லது கடமையை ஆற்றும் நிலையில் , மத்திய அரசு ஊழியர் ஒருவரால் செய்யப்பட்டிருந்தால் , கடமையை அந்த வழக்கின் பொறுப்பிலுள்ள குற்றம் சாட்டுநரை மத்திய அரசு நியமித்திராவிடின் , அப்படி மத்திய அரசு அவரை அனுமதித் தாலன்றி , அந்த வழக்கை விலக்கிக் கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்கக் கூடாது . அந்த நீதி மன்றம் அனுமதி வழங்குமுன் , அப்படி விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியைத் தம் முன்னர் கொணருமாறு குற்றம் சாட்டுநரைக் கேட்கவேண்டும் .

கு.வி.மு.ச. 1973 இன் 322வது பிரிவில் குற்றவியல் நடுவரால் தீர்க்க முடியாத வழக்குகள் குறித்து விளக்கமளிக்கிறது.

( 1 ) ஒரு பரிசீலனை அல்லது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது , ஒரு மாவட்டத்தில் உள்ள குற்றவியல் நடுவர் , 

அந்தக் குற்ற விசாரணையில் -

 ( அ ) தமக்கு அந்த வழக்கை விசாரிப்பதற்கு அல்லது மேல் விசாரணைக்கு அனுப்புவதற்குரிய அதிகார வரம்பில்லை ; அல்லது ,

 ( ஆ ) அத்தகைய வழக்கு மாவட்டத்திலுள்ள மற்றொரு குற்றவியல் நடுவரால் விசாரணை செய்யப்படவேண்டும் அல்லது , மேல் விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும் , அல்லது , 

( இ) அந்த வழக்கினை முதன்மை நீதித்துறை நடுவர் விசாரிக்க வேண்டும் , என்று அனுமானிக்கத் தக்க காரணம் தோன்றும்போது , அவர் அந்த நடவடிக்கையினை நிறுத்திவிட்டு , அந்த வழக்கைப் பற்றிய சுருக்கமான அறிக்கையுடன் , அதனை முதன்மை நீதித் துறை நடுவருக்கும் அல்லது முதன்மை நீதித்துறை நடுவர் நெறிப்படுத்தும் வேறொரு குற்றவியல் நடுவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் . 

( 2 ) அந்தக் குற்றவியல் நடுவருக்கு அப்படிச் சமர்ப்பிக்கப்படும் அந்த வழக்கினை அப்படி விசாரிப்பதற்கேற்ற அதிகாரம் இருக்கும் போது அதனைத் தாமே விசாரிக்கலாம் அல்லது அத்தகைய அதிகாரம் வரம்புள்ள வரும் தமக்குக் கீழ்ப் பணியாற்றுபவருமான மற்றொரு குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும் அல்லது எதிரியை மேல் விசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டும் .

Comments