*கு.வி.மு.ச. 1973 இன் 437வது பிரிவு*
பிணையில் விடத்தாத குற்றங்களில் பிணையில் விடுத்தல் ,
1 ) ஒரு பிணையில் விடத் தகாத குற்றத்தைப் புரிந்து அல்லது புரிந்ததாக சந்தேகப்படத்தக்க எதிரியை , பிடி ஆணையின்றி ஒரு காவல் நிலையப் பொறுப்பாளர் காவலில் வைத்திருந்தாலும் , அல்லது ஒரு நீதிமன்றத்திற்கு வருகை தந்தாலும் அல்லது கொண்டு வரப்பட்டாலும், அந்த நீதிமன்றம் , உயர்நீதிமன்றமாக அல்லது அமர்வு நீதிமன்றமாக இல்லாதபோது , அந்த நபரைப் பிணையில் விடுவிக்கலாம் , ஆனால் அத்தகைய நபர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கத் தக்க குற்றத்தைப் புரிந்துள்ளதாக நம்பத் தக்க விடத்து , அவரை அப்படிப் பிணையில் விடுத்த லாகாது .
எனினும் , பதினெட்டு வயதுக்குக் கீழுள்ள எந்தப்பெண்ணையும் , நபரையும் , நோய்வாய்ப்பட்ட அல்லது குறைபாடுள்ள நபரையும் அத்தகைய குற்றம் சாட்டப்பட்டிருக்கும் போது பிணையில் விடுக்கலாம் ,
புலனாய்வின் போது சாட்சிகள் , எதிரிகளை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது என்ற காரணத்தை மட்டும் காட்டி அவரைப் பிணையில் விடக்கூடாது என்பது சரியல்ல . அவரைப் பிணையில் விடத்தக்க காரணம் இருக்கும்போது , நீதிமன்றத்தின் அத்தகைய நெறிமுறைகளுக்குத் தாம் ஒத்துக் கொள்ள அவர் முன் வரும் போதும் அவரைப் பிணையில் விடவேண்டும் ,
( 2 ) ஒரு புலனாய்வு , பரிசீலனை அல்லது விசாரணையின் எந்தக் கட்டத்திலும் , எதிரி ஒரு கைது செய்வதற்குரிய குற்றத்தைப் புரித்திருப்பார் என்று நம்புவதற்கேற்ற காரணம் ஏதும் இல்லை என்ற அத்தகைய அலுவலர் அல்லது நீதிமன்றத் துக்குத் தோன்றும்போதும் , அதுபற்றி இன்றும் பரிசீலனை செய்யப்பட வேண்டியிருக்கிறது என்று கொள்ளும் போதும் , அத்தகைய பரிசீலனை முடிவடையும் வரையில் , அந்த எதிரியை விடுவிக்கலாம் . அத்தகைய அலுவலர் அல்லது நீதிமன்றத்தின் உசிதம் போல் அவர் இதன் கீழ்க் கூறியுள்ளபடி முன்னிலைப்படுவதற்கான , பிணையாளரின்றி , ஒரு பினை ஆவணத்தை இயற்றித் தருமாறு கேட்கலாம் .
( 3 ) ஒரு நபர் , ஏழாண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கத்தக்க குற்றத்தை அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் 6_ ஆம் அத்தியாயம் , 16 - ஆம் அத்தியாயம் ஆகியவற்றில் சொல்லப் பட்டுள்ள ஒரு குற்றத்தை அல்லது அத்தகைய குற்றம் புரிய , சதி செய்தல் , உடந்தையாக இருத்தல் , முயற்சி செய்தல் ஆகியவற்றிற்காக குற்றம் சாட்டப்பட்ட போது அல்லது சந்தேகத்துக்குள்ளாகும் போது அவரைப் பிணையில் விடுக்கும் நீதிமன்றம் ,
(அ) இந்த அத்தியாயத்தின் கீழ் இயற்றப்பட்ட பிணை ஆவணத்தின் நிபந்தனைகளின்படி அத்தகைய நபர் வருகை தருவதை உறுதிப்படுத்துவதற்காக அல்லது
( ஆ ) அவர் புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அல்லது புரித்திருப்பதாக சந்தேகம் கொள்ளத்தக்க குற்றத்தைப் போன்ற ஒரு குற்றத்தை அவர் புரியாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக , அல்லது ,
( இ ) நீதியின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தாம் அவசியம் எனக் கருதும் எத்தகைய நிபந்தனையையும் விதிக்கலாம் .
( 4 ) ( 1 ) -- ஆவது அல்லது ( 1 ) -வது கிளைக்கூறின்படி ஒரு நபரை , பிணையில் விடுக்கும் நீதிமன்றம் , அல்லது அலுவலர் அதற்குரிய காரணங்களை எழுதி வைக்க வேண்டும் ,
( 5 ) ( 1 ) -- ஆவது அல்லது ( 2 ) - ஆவது கிளைக் கூறின்படி ஒரு நபரைப் பிணையில் விடுவித்துள்ள நீதிமன்றம் அப்படிச் செய்வது அவசியம் என்று கருதும் போது , அவரைக் கைது செய்து காவலில் வைக்க வேண்டுமென்று உத்தரவிடலாம் .
( 6 ) ஒரு குற்றவியல் நடுவரால் விசாரிக்கத்தக்க வழக்கில் , எதிரி கைது செய்தற்குரிய குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் . அந்த வழக்கில் சாட்சியம் எடுப்பதற்காக குறிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து அறுபது (60) நாட்களுக்குள் விசாரணை முடிவடையவில்லையெனில் , அத்தகைய எதிரி அந்த காலம் முழுவதும் சிறைக்காவலில் இருந்தால் , அவரைக் குற்றவியல் நடுவரின் விருப்பத்தை ஈடேற்றுவதற்குரிய பிணையில் விடுவிக்க வேண்டும் . அப்படிச் செய்வதற்கு இயலவில்லையெனில் அதன் காரணங்கனைப் பதிவு செய்ய வேண்டும்.
(7) கைது செய்வதற்குரிய ஒரு குற்றத்துக்கான எதிரியின் மீதுள்ள விசாரணை முடிவடைந்த பின்னரும் தீர்ப்புரை வழங்கப்படுவதற்கு முன்னரும் , அந்த குற்றத்தைப் புரிந்தார் என்று நம்புவதற்கு ஏற்ற ஆதாரம் ஏதும் இல்லையென , அந்த நீதிமன்றம் கருதினால் , அந்த எதிரியைப் பிணையாளர் இன்றி , ஒரு பிணை ஆவணத்தை இயற்றித் தருமாறு செய்து அவரைத் தீர்ப்புரையன்று நீதிமன்றத்துக்கு வருகை தர வேண்டுமெனப் பணித்து விடுவிக்கலாம் .
Comments
Post a Comment