தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 இன் 19(1)வது பிரிவுப்படி முதல் மேல் முறையீட்டு விண்ணப்பம்.

"ஒப்புதலுடன் இணைந்த பதிவஞ்சல்"

மனுதார்:
R. மீனாட்சிக்குமார்,
த/பெ. இராமையா,
4/87, மெயினரோடு,
சங்கராலிங்காபுரம் 626119,
விருதுநகர் வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.
கைபேசி எண்.

பெறுநர்:
திரு. முதல் மேல் முறையீட்டு அதிகாரி அவர்கள்,
தகவல் அறியும் உரிமை சட்டம் -2005,
வருவாய் வட்டாச்சியர் அலுவலகம்,
விருதுநகர் -626001,
விருதுநகர் மாவட்டம்.

மதிப்பு மிகுந்த அய்யா,

பொருள்:
தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 இன் 19(1)வது பிரிவுப்படி முதல் மேல் முறையீட்டு விண்ணப்பம்.

பார்வை:
1) மனுதாரின் வேண்டுகோள் விண்ணப்பம். நாள்.13.09.2021.
2) திரு. பொது தகவல் அலுவலர், வருவாய் வட்டாச்சியர் அலுவலகம், விருதுநகர் கடிதம் ந. க. ஆ2/4378/2021. நாள்.30.09.2021.

1) மனுதாராகிய நான் பார்வை 1 இல் கண்டுள்ள வேண்டுகோள் விண்ணப்பத்தில் 4 இனங்களுக்கான தகவல்களை கோரியிருந்தேன். ஆனால் மதிப்பு மிகுந்த தங்கள் அலுவலக பொது தகவல் அலுவலரால் ஒரே ஒரு இனத்திற்கு மட்டுமான தகவல் பார்வை 2 இல் காண்டுள்ள கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இனம் 2,3,4 ஆகிய 3 இனங்களுக்கான தகவல்கள் வழங்கப்படவில்லை. ஆதலால் தகவல்கள் வழங்க மறுக்கப்பட்டிருப்பதாக கருதப்பட்டு இந்த முதல் மேல் முறையீட்டு மனு பணிந்தனுப்பபடுகிறது.

2) மேற்காணும் மதிப்பு மிகுந்த தங்கள் அலுவலக பொது தகவல் அலுவலரால் மறுக்கப்பட்ட 2,3,4 ஆகிய மூன்று இணங்களுக்கான தகவல்கள் ஆனது. மதிப்பு மிகுந்த தங்கள் அலுவலகத்தில் பொருள்வகை பொருண்மைகளாக (Material Fact) உள்ள நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் 2(f) இல் வகுத்துரைக்கப்பட்டவாறு தகவல் எனும் பதத்தில் வருவதால் மனுதாராகிய நான் கோரியுள்ள தகவல்களை மதிப்பு மிகுந்த தங்கள் அலுவலகம் மறுக்க முடியாது என்றாலும் நான் கூறிய தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இருந்தும் எனக்கு மேற்படி தகவல்களை வழங்கக்கூடாது என்ற கெட்ட நோக்கத்தோடு தகவல் வழங்க மறுத்து வருகின்றனர். என்பதை இந்தத் தருணத்தில்தங்களிடம் பதிவு செய்கிறேன். இத்தகவல்கள் ஆனது மதிப்பு மிகுந்த தங்கள் அலுவலக பொது தகவல் அலுவலரால் தாமாக முன்வந்து இணையத்தளத்திலும் அறிவிப்பு பலகையில் பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளிப்படுத்தக்கூடிய தகவல்கள் ஆகும். என்பதை முதல் மேல் முறையீட்டு அதிகாரி யான தங்களுக்கு நினைவூட்டுகின்றேன்.

3) மந்திய தகவல் ஆணையம் நியூடெல்லி வழக்கு எண் . Cic / appeal / no.42 / ICPB / 2006 DATE : 03.07.2006 என்ற தீர்ப்புரையின் அடிப்படையில் முதல் மேல் முறையீட்டு அதிகாரியான தாங்களே ஒரு நீதிபதியாக இருந்து எனது இந்த முதல் மேல் முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலிக்க வேணுமாய் மிகவும் பணிவோடு வேண்டுகிறேன்.

3)  ஆகையால் இந்த முதல் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு பார்வை உன்னில் கண்டுள்ள மனுதாரர் ஆகிய எனது வேண்டுகோள் விண்ணப்பத்தில் கோரியுள்ள  தகவல்களை இனியும் தாமதமின்றி தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் 7(6)வது பிரிவுப்படி எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாக வழங்கி உதவ வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்க படுகிறது.
                                                                                         மனுதாரர்


 தேதி:
 இடம்:

 இணைப்பு:
1) மனுதாரரின் வேண்டுகோள் விண்ணப்பம் நாள்.13.09.2021 நகல்.

2) விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் கடிதம் ந. க. ஆ 2/4378/2021-நாள்.30.09.2021 நகல்.

Comments