நீதிமன்றத்தின் முன் கருத்துடன் பொய்ச் சான்று புகல் வோருக்கும், நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்காக பொய்ச் சான்றினை உருவாக்குவோர்க்கும் 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்
வேதாளம் சேருமே - வெள்ளருக்கு பூக்குமே
பாதாள மூலிப ட ருமே - மூதேவி சேடனும் குடிபுகுவானே
மன்றோரம் பொய் சொன்னார் மனை என ஒளவைப் பிராட்டியார் நீதிமன்றத்தில் பொய் சாட்சி கூறுபவர்கள் என்ன கதி அடைவார்கள் என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளார்
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பெறச் செய்யாமை செய்யாமை நன்று " என வள்ளுவப் பெருந்தகை பொய் சான்று புகல்வோர் குறித்து மிகத் தெளிவாக விளக்கி கூறியுள்ளார்
இதச _ 1860 இன் 11வது அத்தியாயத்தில் 193 இல் கூறப்பட்டுள்ளவற்றை காண்போமா?
நீதிமன்றத்தின் முன் கருத்துடன் பொய்ச் சான்று புகல் வோருக்கும், நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்காக பொய்ச் சான்றினை உருவாக்குவோர்க்கும் 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்
வேறு வகையில் பொய்ச் சான்று புகல்வோருக்கும் பொய்ச் சான்று புனைவோர்க்கும் 3 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதம் தண்டணையாக விதிக்கப்படும்
விளக்கம் 1
ஒரு படைப்பிரிவில் நடைபெறும் விசாரணையை நீதிமன்ற விசாரணையாகவே கொள்ள வேண்டும்
விளக்கம் - 2
ஒரு நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு முன்னதாகச் சட்டப்பூர்வமாக உத்தரவிடப்பட்ட ஆய்வினை நீதிமன்ற விசாரணையின் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும் அத்தகைய ஆய்வு ஒரு நீதிமன்றத்தில் நடைபெறாவிடினும் பரவாயில்லை
உதாரணம்
செஷன்ஸ் வீசாரணைக்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு வழக்கில் பூர்வாங்க விசாரனண ஒரு மாஜிஸ்திரேட் டின் முன் நடைபெறுகின்றது அந்த விசா நணையில் ஒருவர் சத்தியப்பிரமாணம் செய்த பின் பொய் தகவலை தருகின்றார் அந்த நபர் மீது பொய்ச் சான்றளித்த குற்றம் சாரும்
விளக்கம் - 3
ஒரு நீதிமன்றத்தின் உத்தரவும் அங்கீகாரமும் பெற்று நடைபெறும் புலன் ஆராய்வு, நீதிமன்ற விசாரனையின் ஓர் அங்கமாகவே கொள்ளப்பட வேண்டும்
உதாரணம்
ஒரு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஒரு நிலத்தின் எல்லைகளை நிர்ணயிக்க ஒருவர் நேரடியாகச் சென்று விவரங்களை சேகரிக்கின்றார் அந்த நபர் தாம் நேரில் கண்டறிந்த விவரங்களுக்கு மாறாக ப் பொய்யான தகவலை அளிக்கிறார் அந்த நபர் மீது பொய்ச் சான்று கூறிய குற்றம் சாரும்
என மிகத் தெளிவாக விளக்கி கூறியுள்ளது இந்தச் சட்டப் பிரிவை பயன்படுத்தி பொய்ச் சாட்சியமளித்த நபர்களுக்கு தண்டணை பெற்று தந்துள்ளீர்களா? வழக்கறிஞரிடம் இது குறித்து கேளுங்கள். நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்
Comments
Post a Comment