தமிழ்நாடு அரசு நிலையாணை எண். 854 வருவாய் நி.மு.1 ( 2 ) துறை நாள் : 30.12.2006 இன் விதிமுறைகளின் படி 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் எங்கள் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரும் விண்ணப்பம் .
"ஒப்புதலுடன் இணைந்த பதிவஞ்சல்"
மனுதார்:
பெறுநர்:
திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
,
மதிப்பு மிகுந்த அய்யா,
பொருள் : தமிழ்நாடு அரசு நிலையாணை எண். 854 வருவாய் நி.மு.1 ( 2 ) துறை நாள் : 30.12.2006 இன் விதிமுறைகளின் படி 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் எங்கள் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரும் விண்ணப்பம் .
1. மனுதாராகிய நான் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், வடக்கு மலையடிபட்டி, குலலாளர் தெரு, கதவு எண் 170/A4 இல் குடியிருக்கும் அமரர் .காளிமுத்துவின் மனைவி சீதாலட்சுமி, வயது.... ....... ஆகிய நான் வழங்கும் அபிடவிட்டு .
2. மனுதாராகிய நாங்கள் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், வடக்கு மலையடி பட்டி, குலாலர் தெரு, கதவு எண் 170/A4, இராஜபாளையம் நகராட்சி வரி விதிப்பு எண் 29356 இல் கண்டுள்ள சொத்தானது அரசு புறம்போக்கு நிலமாகும் மேற்காணும் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எனது கணவர் (அமரர்) காளிமுத்து மூலம் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம் மேற்காணும் வீட்டு வரி தீர்வை யானது இராஜபாளையம் நகராட்சி அலுவலகம் வரி விதிப்பு எண் 29356 இல் வீட்டு உரிமையாளர் காளிமுத்து என்ற எனது கணவர் பெயரில் இருந்து வருகிறது. எனது கணவர் காளிமுத்து கடந்த ................. தேதியன்று இறந்து போனார்.
3. மேலும் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்போருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு நிலையாணை எண்.854 வருவாய் நி.மு.1 (2) துறை - நாள் : 30.12.2006 இல் அரசாணை இயற்றியுள்ளது. இந்த அரசாணை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் - 1950 இன் 14வது பிரிவு படி மனு தாராகிய எங்களது கோரிக்கைக்கு பொருந்தும் என மனு தாராகிய என்னால் கருதப்படுகிறது.
4. ஆகையால் தயவு செய்து இராஜபாளையம், நகராட்சி அலுவலக வீட்டு வரி விதிப்பு எண் 29356 இல் கண்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை எங்களது குடும்பத்தார் பெயருக்கு தமிழ்நாடு அரசாணை 854 வருவாய் நி.மு. 1 (2) துறை - நாள் : 30.12.2006 இல் விதித்துள்ள விதிகளின்படி இலவச வீட்டுமனை பட்டா வழங்கி உத்தரவிட வேணுமாய் மனு தாரால் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கப்படுகிறது.
தங்கள் உண்மையுள்ள
தேதி:
இடம்:
இம்மனு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் - 1872 இன் 70வது பிரிவு படி இதையே பிரமாணமாக இதில் ..................... தேதியன்று என்னால் கையொப்பமிடப்படுகிறது.
Comments
Post a Comment