இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி தவறான தகவல்களை பெற்ற பாமர - ஏழை பொதுமக்கள் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கி தவறான தகவல் வழங்கிய பொதுத் தகவல் அலுவலர் மீது குற்ற முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியும்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - விதிகளின்படி தகவல்கள் கோரும் பொதுமக்களுக்கு தவறான / குற்றமிழைக்கும் அரசு அதிகாரிகள் / அலுவலர்கள் ஆகியோர் தாங்கள் தப்பிப்பதற்காகவும், சரியான / உண்மையான ஆவணங்களை வழங்காமல் பொய்யான தகவல்களை / ஆவணங்களை வழங்கி பாமரப் பொதுமக்களை வீணாண அலைக்கழிப்பு மன உளைச்சல் ஆகியவற்றைபாமர - ஏழை பொதுமக்கள் அடைந்து துன்பப்பட்டு வருவதை தெரிந்த நம்மைப் போல் பாதிக்கப்பட்ட ஒருவர் மத்திய தகவல் ஆணையம் , நியூடெல்லிக்கு த அ .உ .ச. 2005 இன் 18 ( 1 ) வது பிரிவு படி புகார் செய்து தவறான தகவல் வழங்கிய பொதுத் தகவல் அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற மகத்தான தீர்ப்புரை உத்தரவைப் பெற்றுள்ளார்.

CIC / MP / CI/2014 - 000138 - தீர்ப்புரை நாள்.O 8-04 -2015 

இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி தவறான தகவல்களை பெற்ற பாமர - ஏழை பொதுமக்கள் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கி தவறான தகவல் வழங்கிய பொதுத் தகவல் அலுவலர் மீது குற்ற முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியும்

காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தின் மூலம் தகுந்த சட்டப் பரிகாரம் கோரலாம்

நீங்களும் இது போல பாதிப்பு அடைந்திருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்

பாதிக்கப்பட்டோர் கழகம்
அருப்புக்கோட்டை

Comments