குண்டர் சட்டம்
குண்டர் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்தின் முழுப்பெயர், " தமிழ்நாடு கள்ளச்சாரயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப்பகுதி நிலங்களை பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகள் அபாயகரசெயல்கள் தடுப்பு சட்டம்".
இச் சட்டத்தின் மூலம் அதிகாரிகள் ஒருவரை சிறையில் தள்ள முடியும் நகர்ப்புறங்களில் காவல்துறை ஆணையரும் கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்த சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் பெற்றவார்கள்.
குண்டர்கள் என்ற வரையறையை விளக்கும் போது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16, 17,22,45 ஆகியவற்றின் கீழ் வரும் குற்றம் எதையாவது செய்யக்கூடியவர். அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் என்று கருதினாலே அவர்களை இந்த சட்டதின் கீழ் கைது செய்யலாம்.
குண்டர் சட்டதில் கைது செய்யப்பட்டது சரியா என்பதை நீதிபதி உள்ளிட்டோரை கொண்ட ஆலோசனை குழு முடிவுசெய்யும். அந்த குழு முடிவு செய்தாலும் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறமுடியும்.
குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டால். அந்த நபரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். மாநில அரசு விரும்பினால் முன் கூட்டியே விடுவிக்கலாம்.
இந்த சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர் இந்த நிபந்தனைகளை மீறினால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
2006 ஆம் ஆண்டில் திரையுலகின் வேண்டுகோளுக்கு இணங்க திரைப்படங்களில் திருட்டுதனமாக பதிவு செய்வது, சிடிக்களில் பதிவு செய்து விற்பதும் குண்டர் சட்டதின் கீழ் கொண்டுவரப்பட்டது.
Comments
Post a Comment