மாவட்டம்........ ஒன்றியம் ........ கிராமத்தில்....ஆண்டு முதல்......ஆண்டு வரையிலான நிதியாண்டில் மத்திய மாநில அரசுகளின் பொது நிதி பாராளுமன்ற உறுப்பினர் நிதி சட்ட மன்ற உறுப்பினர் நிதி மற்றும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதி போன்றவற்றின் தகவலை ஆண்டு வாரியாக அளிக்கவும்

த.அ.உ.ச 2005 பிரிவு 6(1)(3) கீழ் விண்ணப்பம்

அனுப்புநர்
பெயர் முகவரி

பெறுநர்
பொது தகவல் அலுவலர்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (2005)
அலுவலக (முகவரி)
த.அ.உ.ச.2005 பிரிவு 6 (1) கீழ் கீழ் காணும் தகவல்கள் வேண்டல்

1)......... மாவட்டம்........ ஒன்றியம் ........ கிராமத்தில்
....ஆண்டு முதல்......ஆண்டு வரையிலான நிதியாண்டில் மத்திய மாநில அரசுகளின் பொது நிதி பாராளுமன்ற உறுப்பினர் நிதி சட்ட மன்ற உறுப்பினர் நிதி மற்றும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதி போன்றவற்றின் தகவலை ஆண்டு வாரியாக அளிக்கவும்

2)..... கிராம ஊராட்சியில்......ஆண்டு முதல் ......ஆண்டு வரையிலான நிதியாண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்
சாலை போடுதல் குப்பைக் தொட்டி அமைத்தல் தெரு விளக்கு சீர் செய்தல் குடிநீர் பிரச்சினை சீர் செய்தல் கழிவு நீர் மற்றும் வடிகால் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்தல் போன்ற பல திட்டங்கள்
பற்றிய முழுமையான விவரங்களை கீழ் கண்டவாறு அளிக்கவும்

வார்டு எண் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர் செலவான தொகை அதற்குறிய ரசீதின் நகல்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு நிதி வகை குறிப்பிட்டு தகவலாக வழங்கவும்

3)....... ஊராட்சியில்.,.....ஆண்டு முதல்........ஆண்டு வரையிலான நிதியாண்டில் ஊராட்சிக்கு கிடைத்த வருமானம் பற்றிய தகவலை ஆண்டு வாரியாக அளிக்கவும்

4)........ ஊராட்சியில்........ஆண்டு முதல்...... ஆண்டு வரையிலான நிதியாண்டில் குடி மராத்து மூலம் ஊராட்சிக்குட்பட்ட ஏரி குளம் போன்ற நீர் நிலைகளை தூர் வாரப்பட்ட விவரங்களை கீழ்கண்டவாறு அளிக்கவும்

ஏரி குளத்தின் பெயர் தூர் வாரிய மாதம் மற்றும் ஆண்டு செலவிடப்பட்ட தொகை விவரங்களை தகவலாக வழங்கவும்

5)...... ஊராட்சியில் ஆண்டு முதல் .......ஆண்டு வரையிலான நிதியாண்டில் 100 நாள் வேலை செய்பவர்கள் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்த தகவலை ஆண்டு வாரியாக அளிக்கவும்

6)....... ஊராட்சியில்...... ஆண்டு முதல்........ ஆண்டு வரையிலான நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் அரசு கொடுத்த நிதி விவரம் மற்றும் வேலையாட்களுக்கு பணி செய்யப்பட கொடுக்கப்பட்ட பொருட்கள் பட்டியல் விவரம் மற்றும் பணி செய்தவர்களின் எண்ணிக்கை பட்டியல் விவரம் மாதம் மற்றும் ஆண்டு வாரியாக அளிக்கவும்

7)........ ஊராட்சியில் நடைபெற்ற..... ஆண்டு முதல்....... ஆண்டு வரையிலான கிராம சபா கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் நகல்களை வழங்கவும்

8)....... கிராம ஊராட்சியில்
1/8/2019 முதல் 30/9/2020 முடிய உள்ள காலகட்டத்தில்.... கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து குடிநீர் செலவினங்கள் விசை பம்ப்பு மேல் நிலை நீர்தேக்க தொட்டிகள் பராமரிப்பு செலவினங்கள் மின்சார வசதிக்கான செலவினங்கள் பொது நிதியிலிருந்து மூலதன பணிகள் அதன் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் விவரம் இதர நிர்வாக செலவினம் செலவிடப்பட்ட தொகைக்கான ரசீதுகள் நகல்கள் விவரங்களை தனித் தனியாக தகவலாக வழங்கவும்

9) மேற்படி தகவல்களின் ஆவணங்களின் நகல்களை பெற செலுத்த வேண்டிய கட்டணம் முறைகளையும் எங்கு எப்படி எவ்வாறு செலுத்த வேண்டும் என்ற தகவலையும் எனக்கு உரிய காலத்திற்குள் எனக்கு தகவலாக வழங்கவும்

மேற்படி தகவல்களை பெற ரூபாய் 10 க்கான நீதிமன்றம் வில்லை ஒட்டியுள்ளேன்

இப்படிக்கு
கையொப்பம்

நாள்.........
இடம்........ (ஊர்)

மேற்படி ஆண்டுகள் உங்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு தகவல்கள் வேண்டுமோ அவைகளை போட்டுக் கொள்ளுங்கள் 
நன்றி

Comments