கிராமசபை வானளாவிய அதிகாரமும் மற்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளும்
பார்வை :-
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பட்டியல் - ன் படி கிராம மக்களின் வாழ்வாதாரகளான , வேளாண்மை , நீர் நிலை பாதுகாப்புகள் கிராம பஞ்சாயத்து மக்களின் உரிமை , கிராம மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் உரிமை மற்றும் கடமை கிராம் சபைக்கு உள்ளது என பல முறை உச்சநீதிமன்றம் தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது .
* திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் கிராம சபை தீர்மானம் அடிப்படையில் அரசு மதுபானக்கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது . ஆனால் தமிழக அரசு அந்த தீர்ப்புக்கு தடை கோரும் சிறப்பு விசாரணை மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தது இருந்தாலும் , தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து கிராம சபையின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் நிலை நிறுத்தியது
* கேரளா மாநிலம் பிலாச்சிமடாலில் கோகோ கோலா நிறுவனம் நீர்நிலைகளை சீர் அழித்தபோது கிராம சபை தீர்மானங்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . .
* கோலாவில் கடலோர கிராமம் ஒன்றில் தொடங்கப்பட்ட தனியார் நைலான் நிறுவனத்தின் கழிவுகள் கடலில் விடப்பட்டன மீன்கள் செத்து மிதந்தன . இந்த பிரச்சினையை அக்கிராம மக்கள் கிராமசபை தீர்மானங்கள் மூலம் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து சென்றது . இந்த பிரச்சினையில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலையிட்டார் . இறுதியாக உச்சநீதிமன்றம் ' மேல் அவை , ' கீழ் அவை ஆகியவை எப்படியோ அப்படி தான் கிராம சபைகளும் , அவற்றின் அதிகாரத்தை மாற்றவோ குறைக்கவோ முடியாது , என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . உடனடியாக அந்த கிராமத்தில் இருந்து பன்னாட்டு நிறுவனம் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது
. * சத்தீஸ்கர் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வனப்பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் , கொள்ளையடித்தபோது அக்கிராம மக்கள் , கிராமசபை கூட்டத்தில் அந்நிறுவனகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றி உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியது . இதனை அடுத்து அந்நிறுவனகளிடம் இருந்து வனப்பகுதிகள் காப்பாற்றப்பட்டது .
Comments
Post a Comment