*சுவற்றை* *அப்புறப்படுத்த* *செயலுத்துக்கட்டளை*

*சுவற்றை* *அப்புறப்படுத்த* *செயலுத்துக்கட்டளை*

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸அவினாசி

முன்னிலை: திரு.ஏ.எம்.ரவி¸ பி.ஏ.பி.எல்.¸

மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ அவினாசி.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் செவ்வாய்கிழமை

(2045 திருவள்ளுவராண்டு ஜய வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் நாள்)

அசல் வழக்கு எண்.14/2008

அமுதா …. வாதி

.. எதிராக..

1. பாரதி

2. தயாளன்(இறந்துவிட்டார்)

3. பாப்பாத்தி

4. இந்துமதி

5. காந்திமதி

(இ.ம.541/2010 மனுவில் 08.06.2010 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி

வழக்குரையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது) .......பிரதிவாதிகள்


வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

'இவ்வழக்கில் எழுவினாக்கள் 1¸3¸4¸ மற்றும் கூடுதல் எழுவினாக்கள் 1¸2. ஆகியவற்றிக்கு கண்ட விரிவான விளக்கங்கள் படி¸ வாதி வா.சா.ஆ.1ன் மூலம் கிரையம் பெற்ற சொத்திற்கு தாவா "ஏ" அயிட்ட பொதுப்பாதை வழியாக சென்று வருகிறார் என்றும் அதனால்¸ தாவா "ஏ" அயிட்ட பொதுப்பாதை வழியாக அவர் கிரையம் பெற்ற சொத்திற்கு சென்று வரும் பாதை பாத்திய உரிமையை விளம்புகை செய்தும்¸ அதன் தொடர் பரிகாரமாக தாவா "ஏ" அயிட்ட பாதையில் வாதி கிரையம் பெற்ற சொத்திற்கு சென்று வருவதை பிரதிவாதிகளோ¸ அவரது முகவர்களோ¸ தடை செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற வாதி உரிமையுடையவர் ஆவார் என்றும்¸ தாவா "ஏ" அயிட்ட பொதுப்பாதையில் வழக்கு நிலுவையில் இருந்த சமயத்தில் பிரதிவாதிகள் எழுப்பி உள்ள 3 அடி உயர சுவற்றை அப்புறப்படுத்த வாதி செயலுத்துக்கட்டளை பெற வாதி உரிமையுடையவர் ஆவார் என்று எழுவினா-5-ற்கு விடை காண்கிறது.''

Comments