*வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும்*
(1) தெளிப்பு நீர் (Sprinkler)
(2) மழைத்தூவுவான் (Raingun)
(3) சொட்டுநீர் (Drip) போன்ற நுண்ணீர் பாசன கருவிகளை பெற விவசாயிகளை வரவேற்கிறோம்.
1.ஒரு ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை (ஒரு ஹெக்டேர் -7.5மா ) நிலமுள்ள, கம்பியூட்டர் சிட்டா தனது பெயரில் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் 2 இஞ்ச் பாசன குழாய்களை 100% சதம் மானியத்தில் பெற்று கொள்ளலாம்.
2. இரண்டு ஹெக்டேர் (15 மா) வரை நிலமுள்ள, தனது பெயரில் கம்பியூட்டர் சிட்டா வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் இரண்டரை இஞ்ச் குழாய்களை 100% சதம் மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
3.ஐந்து ஏக்கர் முதல் பனிரெண்டரை ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் 3" பைப்புகளை 75% மானியத்தில் பெறலாம்.
மேற்கண்ட இரண்டு மற்றும் இரண்டரை இஞ்ச் குழாய்களை மூன்று இஞ்ச் குழாய்களாகவும் விவசாயிகள் மாற்றி பெற்றுக்கொள்ளலாம். மூன்று இஞ்ச் குழாய்களுக்கு ஆகும் தொகையை கம்பெனி பெயரில் DD ஆக விவசாயிகள் வழங்க வேண்டும்.
*பிரதம மந்திரி கிஸான் நிதி* ₹( நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/-) திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் *சிறு குறு விவசாயி சான்று தர தேவையில்லை*. இதர விவசாயிகள் வருவாய் துறையிடமிருந்து *சிறு குறு விவசாயி சான்று பெற்றுத்தர வேண்டும்.*
தேவையான ஆவணங்கள்:-
1. சிட்டா அடங்கல் (ஒரிஜினல்)
2. நிலவரைபடம்
3.கம்பியூட்டர் சிட்டா
4. ஆதார் கார்டு
5.ரேஷன் (ஸ்மார்ட்) கார்டு
6.பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-1
7. நீர் பரிசோதனை
8. மண் பரிசோதனை
மேலும் இதனை பெறுவது மூலம்
1.Pvc Pipe க்கு Rs.10000 / 1 ha (50%) மானியம் பெற முடியும். 2.மோட்டார் அல்லது எஞ்சின் Rs. 15000 (50%)மானியம் பெற முடியும். மேலும் தொடர்புக்கு உங்கள் பகுதி வேளாண்மைதுறை அலுவலகம் அல்லது உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகவும்.....
Comments
Post a Comment