நில மோசடி
நில மோசடி புகார்கள் / குற்றங்கள் / சட்டப்பிரிவுகள் :
1. அடுத்தவன் சொத்தைத் தன்னுடையது எனச் சொல்லி விற்றவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
2. ஒருவர் உத்தரவு கொடுக்காமலேயே கொடுத்துவிட்டதாக ஆவணங்களைத் தயார் செய்து விற்றவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை - U/S 419, 464, 471 IPC.
3. கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ஒருவனது அசல் நிலப் பத்திரத்தை வாங்கி, தனது சொத்தென்று சொல்லி விற்றவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
4. ஒருவன் பிழைப்புக்காக சில வருடங்கள் வெளியூர் சென்றிருக்கையில், அவனது இடத்தைத் தனக்கு சொந்தமாக்கி விட்டவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 403, 419, 464, 471 IPC.
5. ஒரு இடத்தை இரண்டு நபர்களிடம் விற்றவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
6. ஒரே வீட்டில் அண்ணனது பத்திரத்தை திருடி, அவனது சொத்தை விற்ற தம்பிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
7. தனது இடத்தில் வீடு கட்டுகையில், பக்கத்தில் உள்ள இன்னொருவனின் இடத்தில் சில அடி தூரங்களை ஆக்கிரமித்துக் கட்டுமானம் செய்தவனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 403, 441, 447 IPC.
8. தனது இடத்தை விற்ற போது, பக்கத்திலுள்ள இன்னொருவனின் நிலத்தையும் சேர்த்து விற்றவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 403, 419, 464, 471 IPC.
9. எல்லைக் கல்லைப் பிடுங்கிவிட்டு, அடுத்தவன் இடத்தை ஆக்கிரமிப்புச் செய்தவனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 403, 441, 447, 489 IPC.
Comments
Post a Comment