ஆக்ரமணங்களை அகற்றும் அதிகாரம் உள்ளவர் பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளிலுள்ள அரசுப் புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்ரமணங்களை அகற்ற வருவாய்க் கோட்ட அலுவலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ஆக்ரமணங்களை அகற்றும் அதிகாரம் உள்ளவர் பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளிலுள்ள அரசுப் புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்ரமணங்களை அகற்ற வருவாய்க் கோட்ட அலுவலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின் ஆக்ரமணங்களை இரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்ட பின்னர் அதனை அகற்ற நடவடிக்கையெடுக்க வேண்டியது வருவாய் அலுவலரின் கடமையாகும்.
கோயில் புறம்போக்குகளில், ஏதேனும் ஆக்ரமணம் ஏற்பட்டால் அதனை அவ்வப்போது தெரிவித்து அகற்ற நடவடிக்கையெடுக்க வேண்டியது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும்.
சில கிராமங்களில் பூமியில் உள்ள கால்வாய், மழைநீர் செல்லும் பாதை, நடைபாதை மற்றும் வண்டிப்பாதை ஆகிய விவரங்கள் கிராம வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். பட்டா நிலங்களில் குறிப்பிடப்பட்ட பாதைகளை எவ்வித காரணத்திற்காகவும் பட்டாதாரர் தடுக்க இயலாது. அவர் அவ்வாறு தடுத்தால் தமிழ்நாடு நில ஆக்ரமணச் சட்டம் 1905 விதிமுறைகளை அனுசரித்து ஆக்ரமணத்தை அகற்ற வேண்டும்.
தமிழ்நாடு நில ஆக்ரமண திருத்தச் சட்டம் 1996-இன் படி ஆக்ரமண விஷயங்களில் உரிமையியல் நீதிமன்றங்கள் தலையிட முடியாது, உயர்நீதி மன்றம் மட்டுமே தலையிட முடியும்.
மிழ்நாடு பொது இட(அங்கீகரிக்கப்படாத ஆக்ரமணதாரர்கள் அப்புறப்படுத்துதல்) சட்டம் 1976 :
அரசு உபயோகத்திலிருக்கும் கட்டடங்கள், நிலங்கள் ஆகியவற்றில் ஏற்படும் ஆக்ரமணங்கள் அனைத்தும் இச்சட்ட வரன்முறையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும். இச்சட்ட்த்தின்படி சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் மற்ற மாவட்டங்களிலுள்ள வருவாய் கோட்ட அலுவலர்களே நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் ஆவார்.
பொது இடங்களை ஆக்கிரமித்துள்ள நபர்/நபர்களுக்கு காரணம் கேட்கும் குறிப்பாணையை 10 நாட்கள் கால அவகாசத்துடன் முதலில் வழங்க வேண்டும், அவர்கள் பதில் கொடுப்பின்,அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தி அதன் பின் அவர்களை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கலாம்.
நில ஆக்ரமண சட்ட்த்தின்படி நடவடிக்கை நிலுவையில் இருந்தபோதிலும் அந்தப் பசலியின் இறுதியில் வட்டாட்சியரால் நில ஆக்ரமணச் சட்டம் 1905-இன் படி அபராதமும் விதிக்கலாம்.(விவரங்கள் கிராமக் கணக்கு எண் 7-இல் தரப்பட்டுள்ளது)(சட்டப்பிரிவு 5).
Comments
Post a Comment