நூறு நாள் வேலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் உங்கள் ஊரில் எவ்வளவு மோசடி.

நூறு நாள் வேலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் உங்கள் ஊரில் எவ்வளவு மோசடி* அறிந்துக்கொள்ள http://mnregaweb4.nic.in/netnrega/SocialAuditFindings/SA-GPReport.aspx?page=S&lflag=eng&state_name=TAMIL%20NADU&state_code=29&fin_year=2018-2019&source=national&Digest=UdO7CvcLDALlu7Eba0bMBQ
லிங்க்கை கிளிக் செய்து உள்ளே செல்லவும்....


உங்கள் மாநிலம் State 

மாவட்டம் District

ஊராட்சி ஒன்றியம் Block

ஊராட்சி Panchayat

  ஆகியவற்றை வரிசையாக தேர்வு செய்த பிறகு 
கிராம சபை Gram Shabha Date தேதிகள் (சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை) 4 - தேதிகள் அதிலேயே வரும்....  



ஒவ்வொன்றாக உள்நுழைந்து மேலிருந்து கீழாக பார்க்கவும் அதில் 9 வது தலைப்பான Summary Of Action Taken Report -ல் FM, FD என்று இரண்டு வகையில் தொகை வரும் 
இவை இரண்டையும் (FM+FD) நீங்கள் கூட்டிப்பார்த்துக் கொள்ளவும்.

அது நூறு நாள் வேலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் உங்கள் ஊரில் நடைபெற்ற மோசடியில் ஆதாரப்பூர்வமாக மாட்டி கொன்ட தப்பமுடியாத, ஓடவோ ஒளியவோ முடியாத மோசடி தொகை ஆகும். 
 
( FM = financial misappropriation 
நிதி மோசடி

 FD = financial deviation நிதி இழப்பு)
 

மோசடி எப்படி நடந்தது, திருடன் எப்படி சட்டத்தின் பிடியில் சிக்கிகொன்டான் என்ற முழு விபரமும் இதே இடத்தில் அடுத்த 10-வது தலைப்பான Individual Issues -ல் கிடைக்கும்.

 இந்த விபரத்தை மட்டும் இடமிருந்து வலமாக தள்ளிப்பார்க்க வேண்டும்.  

     
இதில் முதலில் வரிசை எண் SR# என்று கண்டறியப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டு இருக்கும்.

 அடுத்து Issue Number என்று கேஸ் எண் (இது முக்கியம்) வரும்

 அடுத்து Issue Type (குற்றத்தின் தலைப்பு)

 Issue Description குற்றம் நடந்தது என்ன என்ற விபரம் 

மோசடி தொகை Issue Amount  

மேல்நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரிக்கு இந்த பிரச்சினை அனுப்பபட்டுள்ளது...

 Issue Forwarded To என்ற விபரம், தற்சமயம் வழக்கு நிலை Status ஆகிய விபரங்கள் இடமிருந்து வலமாக வரும் 

கடைசியில் View Details என்று வருவதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால் அந்த ஒரு மோசடிக் குற்றம் மட்டும் தனியாக முழு ஜாதகத்தோடு வரும், மேலும் அதில் குற்றம் நடந்தது என்ன Issue Description செய்தது யார் (Persons responsible for this issue) என்ற விபரம் பெயர் பதவி செல் எண்ணுடன் கிடைக்கலாம்.

 
மத்திய அரசின் தேசிய கிராமபுற வேலை உறுதியளிப்பு திட்டத்தின் http://mnregaweb4.nic.in அதிகாரபூர்வ இனையதளத்தில் இருந்து நீங்கள் உங்கள் ஊர் மோசடி விபங்களை தெரிந்து கொன்டுள்ளதால் கிடைத்த விபரங்களை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை.

  இந்த தளங்களில் கிடைத்த செய்திகளை பொறுத்தவரை மத்திய அரசாலும் கிராம சபையாலும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட விசயம் என்பதையும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியவர்கள் காப்பாற்ற மட்டுமே முயற்சி செய்கின்றார்கள் என்பதையும் மனதில் கொன்டு தண்டனை வழங்க சட்டபடி முயற்சி செய்யுங்கள். 

நீங்கள் அனுப்பிய புகார் மனு கிடைக்கும் பதில்களை, சேமித்து தொடர்ந்து வழிக்காட்டலுக்காகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும்.

 *2021 இலக்கு ஊழற்ற கிராமம்* 
 
அடுத்தடுத்த மொகா உள்ளாட்சி ஊழல்கள் வெளிவர உள்ளதால் தொடர்பில் இணைந்திருங்கள்
 
என்னுடை பணம்- என்னுடைய ஊரில் மோசடி 
கேள்விக்கேட்பது என் உரிமை  
சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுப்பது என்னுடைய கடமை


உரிமையுடன்....

நன்றி....

Comments