ஒரு வாகனத்திற்கு கடனுதவி அளித்த நிறுவனம், அந்த கடன் தொகையை கடன்தாரர் கட்டவில்லை என்பதற்காக அந்த வாகனத்தை எப்படி மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு வாகனத்திற்கு கடனுதவி அளித்த நிறுவனம், அந்த கடன் தொகையை கடன்தாரர் கட்டவில்லை என்பதற்காக அந்த வாகனத்தை எப்படி மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் " D. V. நஹீஷா Vs ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட், சென்னை ( 2012-3-CLT-577)" என்ற வழக்கில் தீர்ப்பாக கூறியுள்ளது.
மேற்கண்ட தீர்ப்பின் பாரா 10 ல்
" நிதி நிறுவனம் போன்றவர்கள் கடனை திருப்பி செலுத்தாதவர்களிடமிருந்து தங்கள் விருப்பம் போல் வாகனத்தை கைப்பற்றக்கூடாது. சட்டத்தின்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தை அணுகி ஒரு வாகனத்தை கைப்பற்றுவதற்கு ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க நீதிமன்றத்தில் கோர வேண்டும். இந்த வழிமுறையை தான் நிதி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் "சிட்டிகார்ப் மாருதி பைனான்ஸ் லிமிடெட் Vs S. விஜயலட்சுமி (2012-1-SCC-1-)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை பின்பற்றி வழங்கியுள்ளது.
Comments
Post a Comment