ஒரு முட்டையை மீட்க கோர்ட்டுக்குச் சென்று கோழியை இழந்த வரலாறுகள் நமது தேசத்தில் நிறைய உலா வருகிறது. இது பாமர சாமானிய பொதுமக்களின் சட்ட விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது. இவற்றை ஆய்வு செய்த எங்கள் பாதிக்கப்பட்டோர் கழகம் எங்கள் ஆசான் திரு செந்தமிழ்க்கிழார் மூலம் அடிப்படைச் சட்டங்களை கற்றுக்கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கறிஞர் இல்லாமல் வாதாடுவதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொண்டு அவற்றை சாமானிய பாமர மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் முகமாக சட்ட விழிப்புணர்வு பரப்புரையை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம். இதன் மூலம் எங்கள் பாதிக்கப்பட்டோர் கழகத்தினர் முட்டையை மீட்பதற்காக கோர்ட்டுக்கு சென்றாலும் கோழியின் இறகை (மயிறு) மட்டுமே செலவழித்து முட்டையை மீட்பதற்கான வழி முறைகளை கற்றுத் தேர்ந்து வருகின்றனர்.
நீங்களும் எங்களோடு இணைந்து இருங்கள் அப்படி நீங்கள் இணைந்திருக்கும் போது அரசுத் துறை/ காவல்துறை /நீதித்துறை /மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரை வேலை வாங்கும் ரகசியத்தை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.
பெரும்பாலான குற்றங்கள் நிலம் சம்பந்தமான பிரச்சனைகளிலேயே உருவாகிறது. நில தாவா களை எப்படி கையாளுவது அதில் குற்றமுறு நிகழ்வுகளை எப்படி நீக்குவது என்பதை அறியாமல் பெரும்பாலான பாமர சாமானிய மக்கள் இருந்து வருகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். இவற்றை நமது பாதிக்கப்பட்டோர் கழகம் ஆழமாக ஆய்வு செய்கிறது நீதியோடும் நேர்மையோடும் வாழ்க்கை நடத்தும் பல்வேறு நபர்களின் பிரச்சினைகளை களைய எண்ணியே நாங்கள் பாமர சாமானிய பொதுமக்கள் எளிமையாக அறிந்து கொள்ளும் முகமாக சட்ட பரப்புரையை செய்து சட்ட விழிப்புணர்ச்சி அளித்து வருகிறோம். எங்களோடு இணைந்து இருங்கள் நீங்கள் விழிப்புணர்ச்சி அடையலாம்.
Comments
Post a Comment