நம் நாட்டில் தற்போதும் பெரும்பாலான விவசாயிகள் கட்டுக்குத்தகை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்குகளும் அதிக அளவில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. பெரும்பாலும் வாய்மொழி கட்டுக்குத்தகை என்ற ரீதியிலேயே விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர்.
நம் நாட்டில் தற்போதும் பெரும்பாலான விவசாயிகள் கட்டுக்குத்தகை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்குகளும் அதிக அளவில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. பெரும்பாலும் வாய்மொழி கட்டுக்குத்தகை என்ற ரீதியிலேயே விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர்.
ஒருவரின் பெயர் குடிவார பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்கூட அனுபவத்தை வைத்து கட்டுக்குத்தகையாளருக்கு ஆதரவாக உறுத்துக் கட்டளை உத்தரவு வழங்கலாம் " J. M. Jeyachandran" என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் யார் கட்டுக்குத்தகைதாரர் என்ற முறையில் விவசாயம் செய்து வருவதாக கூறுகிறாரோ அவரே வழக்கை நிரூபிக்க வேண்டும் என்று 2007 - 5 - TLNJ - 425 என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
இந்தியா விடுதலை பெற்ற பின்னர், நிலத்தில் வியர்வை சிந்தி பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கை நிலையை உயர்த்தி விளைச்சலை பெருக்கிட நிலச் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று உணர்ந்த அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. நிலத்தை உழுபவர்கள் தங்களுக்குரிய பங்கினை பெற்றாலொழிய உணவு உற்பத்தியில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று கருதிய அரசு நிலத்தை உழுபவர்களிடையே ஆர்வத்தை ஊட்டி, நிலத்தில் ஈடுபட வைக்க வேண்டும், அதற்கு முதலில் அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவோம் என்ற அச்ச உணர்வை நீக்க வேண்டும், நியாயமான வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கம், நில உரிமையாளர்களால், முறையின்றி வெளியேற்றப்படும் குத்தகைதாரர்களின் நலனை பாதுகாப்பதாகும்.
இந்த சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வருவாய் நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாக மட்டுமே குத்தகைதாரரை நிலத்திலிருந்து வெளியேற்ற முடியும். வாடகை செலுத்தாமை, நிலத்திற்கு சேதம் ஏற்படுத்துதல் அல்லது ஊறு விளைவித்தல், விவசாயம் தவிர வேறு செயல்களுக்கு நிலத்தை பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக மட்டுமே கட்டுக்குத்தகைதாரரை வெளியேற்ற முடியும்.
பிரிவு 4 ன்படி குத்தகைதாரர் சுவாதீனத்தை திரும்ப பெற முடியும்.
பிரிவு 3(3a) ன்படி குத்தகை பணத்தை உரிமையாளர் அதனை வருவாய் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யலாம்.
இராணுவ வீரர்களுக்கு பிரிவு 4AA ன்படி சிறப்புரிமைகள் தரப்பட்டுள்ளது. இராணுவ வீரர்கள் உள் கட்டுக்குத்தகைக்கு நிலங்களை கொடுக்கவும், உரிமையாளராக இருக்கும் பட்சத்தில் நில சுவாதீனத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிரிவு 4B ன்படி கட்டுக்குத்தகை ஒப்பந்தம் தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது.
பிரிவு 6 ன்படி வருவாய் கோட்டாட்சியர் பிறப்பிக்கும் உத்தரவில் தலையிட உரிமையியல் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.
குத்தகைதாரர் என்பது அவரையும், அவரது வாரிசுகளையும், உள் கட்டுக்குத்தகைதாரரையும் உள்ளடக்கும்.
பிரிவு 2(a)(a) ன்படி ஒருவர் கட்டுக்குத்தகைதாரர் உரிமை கோர வேண்டுமானால் நிலம் தன்னிடம் கட்டுக்குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டதை நிரூபிக்க வேண்டும்.
கட்டுக்குத்தகைதாரர் தனது சொந்த உடல் உழைப்பை பயன்படுத்தி விவசாயம் செய்து இருக்க வேண்டும். அதேபோல அவரது குடும்பத்தினரும் சொந்த உடல் உழைப்பை செய்திருக்க வேண்டும்.
Comments
Post a Comment