வாழ்க்கையை நெறிப்படுத்துவது எது என்று நாம் ஆராய்ந்தோமானால் மனித வாழ்வியலை நெறி படுத்துவதும் மேம்படுத்துவதும் தனி மனித வாழ்வியல் நடைமுறைகள் ஆகும்.
வாழ்க்கையை நெறிப்படுத்துவது எது என்று நாம் ஆராய்ந்தோமானால் மனித வாழ்வியலை நெறி படுத்துவதும் மேம்படுத்துவதும் தனி மனித வாழ்வியல் நடைமுறைகள் ஆகும். இவற்றை அடியொட்டி உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளது சட்டங்களை நாம் கடைப்பிடிக்கும் முறைகள் மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றை நாம் பின்பற்றும் போது ஜனநாயக மாண்பு மேம்படுகிறது இறையாண்மை தழைத்தோங்குகிறது.
சட்டம் மனிதனின் ஒவ்வொரு வாழ்க்கை சூழ்நிலையிலும் மாறுபடுகிறது வேறுபடுகிறது அவற்றை கடைபிடிப்பதும் மாறுபடுகிறது வேறுபடுகிறது. நமது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் மக்களின் கலாச்சாரம் வாழும் முறை ஆகியவைகள் வேறுபடுகிறது. அது போலவே சட்டமும் வேறுபடுகிறது. இது நமது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இந்த சட்ட வேறுபாடுகள் இருக்கும். ஏனெனில் உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு வாழ்வியல் நடைமுறைகளையும் /கலாச்சாரங்களையும் கொண்டு இருப்பதால் இந்த வேறுபட்ட சட்டங்கள் அவசியமாகிறது
கடந்த 1700 ஆம் ஆண்டு உலகத்தில் உள்ள பல நாடுகளில் எழுத்து மொழியாக கொண்டு வரப்பட்டதுதான் சட்டம் இந்த சட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் திருத்தம் செய்து ஒவ்வொரு காலகட்டத்திலும் சட்டத்தின் மாற்றங்கள் இந்த உலகம் கண்டுள்ளது. ஏன் சட்டங்கள் உலகத்திற்கு தேவையுள்ளது என நாம் ஆராய்ச்சி செய்தால் மனித வாழ்வியலில் நெறியற்ற வாழ்க்கை முறைகளால் குற்றங்கள் மிகுந்துள்ளதால் மனிதனை நெறிப்படுத்துவதற்கும் / அமைதியான சூழலை இந்த உலகம் அடைவதற்கும் சட்டங்களின் தேவைகள் அவசியமாய் உள்ளது.
மற்றவர்கள் உன்னை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அதே மதிப்பை நீ பிறருக்கும் வழங்கு என்பதே உலக மனித உரிமை தத்துவம் ஆகும். இதையே சர்வதேச மனித உரிமை பிரகடனம் மிகத் தெளிவாக கூறுகிறது மனித உரிமை பேணுவதே உலக சட்டத்தின் தலையாய கடமையாக உள்ளது இவற்றை உணராமலேயே பொதுமக்கள் விழிப்புணர்வு இன்றி தவிக்கிறார்கள். நாம் நேர்மையாக வாழ்வதும் மற்றவர்களை நேர்மையாக வாழ வைப்பதும் நமது தலையாய கடமையாக உள்ளது இவற்றை நெறிப்படுத்தும் போது சட்டம் தனது கடமையை செய்யத் தொடங்குகிறது. இதை உணர்ந்து நாம் செயலாற்றினால் நிச்சயமாக இன்பமான வாழ்க்கை நமக்கு உள்ளது என்பதை நீங்கள் உணர முடியும்
இறையாண்மை மனிதனின் நெறி மிகுந்த வாழ்க்கையிலேயே உள்ளது நாம் நெறி பிறழாமல் வாழும்போது நாம் இறையாண்மையை ஏந்திப் பிடிப்பவராக இருக்கிறோம் சட்டங்களை பின்பற்றும் போது மட்டுமே நாம் நெறி மிகுந்த வாழ்வியலை கடைப்பிடிப்பதாக கருதமுடியும் இவற்றை எத்தனை மனிதர்கள் கடைபிடிக்கிறார்கள் என ஆராய்ச்சி செய்தால் விடை மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. ஏனெனில் நெறி மிகுந்த வாழ்வியல் இந்த உலகில் தேடும் பொருளாகவே உள்ளது இவற்றை கண்டு மனம் மிகவும் வேதனைப்படுகிறது நெறி மிகுந்த வாழ்க்கை சட்டப் பின் பற்றுதலை அடையாளப்படுத்தும். மனிதகுல வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நேர்மையாக வாழுகின்ற வாழ விரும்புகிறவர்கள் எமது பாதிக்கப் பட்டோர் கழகத்தில் உறுப்பினராக இணைவதற்கு முழுமையான தகுதி உள்ளவர்களாக கருதப்படுவார்கள். நேர்மையாளர்களை வரவேற்கிறது நமது பாதிக்கப்பட்டோர் கழகம்
Comments
Post a Comment