கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை - உச்சநீதிமன்றம் உத்தரவு.

*கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை - உச்சநீதிமன்றம் உத்தரவு*
----------------------------------------------------------------------------------------
நீதிமன்ற உத்தரவு நகல் : https://bit.ly/2rTC0Dx
-------------------------------------------------------------------------------
கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்த நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானால், வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று, நீதிபதிகள் சி.கே.பிரசாத், ஜே.எஸ்.கெஹர் ஆகியோரை கொண்ட அமர்வில் நேற்று நடைபெற்றது.
இந்த விசாரணையின்போது காவல்துறையினர் மேற்கொள்ளும் மோசமான விசாரணையினால் நாடு முழுவதும் பல கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகளின் விடுதலை அதிகரித்து வருவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
இதுபோன்ற வழக்குகளில், குற்றவாளிகளின் விடுதலைக்கு காரணமான தவறு செய்யும் விசாரணை அதிகாரிகளுக்கு (காவல்துறை அதிகாரிகள்) தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். உத்தரவில் நீதிபதிகள் மேலும் கூறி இருப்பதாவது-
“குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், அப்பாவிகள் மீது வழக்கு தொடராமல் இருக்கவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிப்பதற்கு 6 மாதங்களில் புதிய அமைப்பு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் விடுதலையாகும்போது நீதி வழங்கும் முறை தோல்வி அடைவதை புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு விடுதலையும், தவறான நபர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.
குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும் வழக்குகளின் தீர்ப்புகளை ஒவ்வொரு மாநில அரசுகளின் உள்துறையும் தீவிரமாக ஆய்வு செய்து அந்த வழக்கு தோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்து பதிவு செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மற்றும் நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணையின்போது நடந்த தவறுகள் என்ன என்பதையும் அதற்கு காரணமான அதிகாரிகளையும் கண்டறிந்து, அவர்கள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்”.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்

Comments