எனது உறவினர் ஒருவர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார்

எனது உறவினர் ஒருவர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார்*

 *முதலில் சுமார் பத்தாயிரம்  ரூபாய் செலுத்தி வாங்கிய அவர் இரண்டு மூன்று மாதங்கள் தவணை தொகையை செலுத்திய பின்னர்  ஒரு மாதம் பணம் செலுத்த முடியாமல் இருந்துள்ளது*

*இந்த நிலையில்  இவரது வீட்டுக்கு வந்த பைனான்ஸ் நிறுவனத்தின் குண்டர்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்*


*அந்த வண்டி சாவியுடன் இந்த நபரின் வீட்டு சாவியும் வெளிப்புற கேட் சாவியும் இருந்துள்ளது அதனையும் தர மறுத்து வருகிறார்கள்*

*பைனான்ஸ் நிறுவனத்திடம் தினம் கேட்டதற்கு மொத்த தொகையையும் அதாவது சுமார் 65 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டு வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி வருகிறார்கள்*

 *இது நடந்து சுமார் மூன்று வாரங்கள் ஆகிறது*

 *ஆனால் அந்த நபர் இதுவரை காவல் நிலையத்தில் எதுவும் புகார் அளிக்கவில்லை*   

 *எனவே பாதிக்கப்பட்ட நபர் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை  தங்கள்  கருத்தை எதிர்பார்க்கிறேன்*

*பைனான்ஸ் நிறுவனங்கள் வாகனத்தை பறிமுதல் செய்ய கூடாது என நீதிமன்ற உத்தரவு உள்ளதாக எனக்கு நினைவில் உள்ளது அது பற்றிய ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் தயவுசெய்து பதிவிடவும்*

Comments